ஒரு மாத காலமாக மகளை காணவில்லை….. எங்கு தேடியும் கிடைக்காமல் கதறும் தந்தை!!

கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் 2023(கலைப்பிரிவு) உயர்தர பிரிவில் கல்வி பயின்று வந்த எனது மகள் புவனேஸ்வரன் ஆர்த்தி என்பவரை 05/08/2023 இல் இருந்து காணவில்லை என அவரது தந்தை புகா‌ர் செய்துள்ளார்.

இவரை,

பல்வேறு இடங்களில் ஒரு மாத காலமாக தேடியும் இவரை பற்றிய எந்தவொரு தகவலும் எமக்கு கிடைக்க வில்லை என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

யாராவது குறித்த சிறுமியை கண்டாலோ, அல்லது ஏதேனும் தகவல் தெரிந்தாலோ உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவித்து அந்த தந்தையின் கண்ணீரை துடைக்க வழி செய்யும் வண்ணம் உறவுகள், அயலவர்கள் கேட்டுக் நிற்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *