ஒமிக்ரோன் தொற்று நோய் அறிகுறிகள் எவை….. ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப் திடுக்கக்கிடும் முடிவுகள்!!
ஒமிக்ரோன் தொற்று குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், அதன் அறிகுறிகள் குறித்து ஆராய்ந்ததில், ஒமிக்ரோனுக்கு பல அறிகுறிகள் இருந்தாலும், ஒரே ஒரு பொதுவான அறிகுறி இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
அது தான் தொண்டை வலி (Sore throat).
ஒமிக்ரோனால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள தென் ஆபிரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு ஆரம்ப கட்டத்தில் தொண்டை வலி பிரதானமான அறிகுறியாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
மேலும்,
தென் ஆபிரிக்காவில் தொண்டை வலியுடன் சேர்த்து மூக்கடைப்பும் பலருக்கு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 3 முதல் 10ம் திகதி வரை பிரிட்டனில் ஒமிக்ரோன் பாதித்தோரிடையே நடத்தப்பட்ட ஆய்வில் தலைவலி, சோர்வு, ‘முக்கியமாக’ குளிர் போன்ற அறிகுறிகள் பிரதானமாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது.
ZOE Symptom Tracking எனப்படும் ஒமிக்ரோன் அறிகுறி குறித்த ஆய்வு அறிக்கையில் மூக்கு ஒழுகுதல், தலைவலி, சோர்வு (லேசான அல்லது கடுமையானது), தும்மல் மற்றும் தொண்டைப் புண் அல்லது வலி ஆகியவை தான் ஒமிக்ரோனின் அறிகுறிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்டாவுக்கும், ஒமிக்ரோன் தொற்றுக்குமான அறிகுறிகள் ஒவ்வொன்றுக்கும் இடையே மாறுதல்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டெல்டா பாதிப்பில் வாசனை, சுவை தெரியாமல் போவது, காய்ச்சல், தொடர்ச்சியான இருமல், சோர்வு போன்றவை அறிகுறிகளாக இருக்கிறது. சிலருக்கு குடல் பிரச்சினைகளும் கண்டறியப்பட்டுள்ளன.
ஆய்வினை தலைமையேற்று நடத்தியிருக்கும் விஞ்ஞானி, பேராசிரியர் டிம் ஸ்பெண்டர் கூறுகையில், ஒமிக்ரோனின் அறிகுறிகள் மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, தும்மல் என குளிர் தொடர்புடையவையாக இருக்கிறது. எனவே, மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம், அது கொவிட்டாகவும் இருக்கலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.