14 வயது மாணவி அடித்து கொலை….. தந்தையும் தந்தையின் சகோதரனும் கைது!!
கம்பளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இசம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும், சிறியதந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
காதல் விவகாரம் காரணமாக சிறுமியின் சிறியதந்தை நேற்றைய தினம் அவரை தாக்கியுள்ளார்.
அதன்பின்னர் நேற்று அதிகாலை சிறுமி உடல்நிலை சரியில்லாமல் புலம்பிய போது, சிறுமியின் தந்தை மீண்டும் தாக்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
பின்னர் சிறுமியை அவரது தாயார் அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், பின்னர் மயக்கமடைந்த சிறுமியை கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கம்பளையில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் நிபுனி நுவந்திகா பண்டார (வயது – 14) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மற்றும் சிறியதந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கம்பளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.