தனக்கு தானே தீ வைத்த கர்ப்பிணி பெண்….. வடமராட்சி மண்டானில் சம்பவம்!!
வடமராடசியில் உள்ள மண்டன் என்னும் பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
தீவுப்பகுதியை சேர்ந்த குறித்த பெண் மண்டான் பகுதியில் அமைந்துள்ள தனது கணவரின் வீட்டிற்கு வருகைதந்து அங்கே ஏற்படட பிரச்னை காரணமாக,
காலை 11.00 மணியளவில் வீட்டில் இருந்த மண்ணெய்யை தன்மேல் ஊற்றி வயிற்றில் கருவுடன் இருந்த அவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.