கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில் நடந்துகொண்ட விதம் மிகவும் நாகரீகமானது (காணொளி)….. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க!!

துப்பாக்கிகள் இல்லாது, குண்டுகள் இல்லாது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் கொழும்ப பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது  ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டியுள்ளனர் என முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும்,

தமது சுதந்திரத்திற்காக அடுத்தவர்களின் சுதந்திரத்தை பாதிக்காத வகையில் மாணவர்கள் நடந்துகொண்டனர் எனவும் பாராட்டியுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பல்கலை வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற போது சில மாணவர்கள் தேரரின் கைகளில் இருந்து பட்டத்தை பெற மறுப்பு தெரிவித்திருந்தனர்.

 

இந்நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில் நடந்துகொண்ட விதம் மிகவும் நாகரீகமானது எனவும் மாணவர்கள் தமது எதிர்ப்பை மிகவும் ஜனநாயக முறையில் வெளிக்காட்டினர் எனவும் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் இலங்கையில் ஜனநாயகம் வெற்றிபெற்ற நாளாக பதிவாகியுள்ளது.

மாணவர், மாணவிகள் இலங்கை மக்களது ஜனநாயக உரிமைகளை உரிய முறையில் செயற்படுத்தினர் எனவும் பாராட்டியுள்ளார்.

அரசாங்கம் அல்லது நாட்டின் தலைவர் மக்களின் விருப்பத்திற்கு மாறான தீர்மானங்களை எடுக்கும் போது, அது குறித்து கேள்வியெழுப்ப மக்களுக்கு உரிமை இருக்கின்றது.

அந்த வகையில் மாணவர்கள் இலங்கையில் ஜனநாயகத்தை உச்ச நிலைக்கு கொண்டுவந்துள்ளனர்.

அவர்கள் தமது எதிர்ப்பை அமைதியாகவும், பலமாகவும் வெளிக்காட்டினர். இதனையே நாங்கள் ஜனநாயகம் என்கிறோம். நாட்டின் முன்னாள் தலைவர் என்ற வகையில் அந்த மாணவர்களுக்கு கௌரவத்தை வழங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *