குறைந்தன வெள்ளைச் சீனி மற்றும் பால் மா விலைகள்!!

வெள்ளைச் சீனி, பால் மா ஆகியவற்றின் விலையைக் குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி,

ஒரு கிலோக் கிராம் வெள்ளைச் சீனியின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதனை இன்று (15/05/2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 243 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன்,

பால் மாவின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 1080 ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *