வீரர்கள், ஓட்டல் ஸ்டாஃப்களுக்கு கொரோனா: தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து வீரர்கள், ஓட்டல் ஸ்டாஃப் என கொரோனா தொற்று அதிகரித்ததால் இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இங்கிலாந்து அணி 3 டி20, 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. டி20 தொடரில் முதலில் நடைபெற்றது. இந்தத் தொடரை இங்கிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது.
அதன்பின் கடந்த 4-ந்தேதியில் இருந்து வரும் 9-ந்தேதி வரை மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.
4-ந்தேதி போட்டிக்கு தயாராகுவதற்கு முன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் 4-ந்தேதி நடைபெற இருந்த போட்டி இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
2-வது போட்டி நேற்று நடைபெற இருந்தது. ஓட்டல் ஸ்டாஃப்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நேற்றைய போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் நாளை மறுநாள் 3-வது போட்டி நடைபெற இருந்தது. மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த சிக்கலில் போட்டியை நடத்தினால் வீரர்கள் மனதளவில் பாதிக்க வாய்ப்புள்ளதால், இரு நாட்டு கிரிக்கெட் போர்டுகளும் பேச்சுவார்த்தை நடத்தி தொடர ஒத்திவைக்க முடிவு  செய்தது.
இதனால் தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *