மனைவியின் அடியை தாங்க முடியாதமல் Video ஆதாரத்துடன் போலீசில் புகார் செய்த கணவன் (காணொளி)!!

மனைவியின் அடியை தாங்க முடியாத கணவன் நீதிமன்ற படியேறிய சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.

பாடசாலை அதிபரான அஜித் சிங் யாதவ் என்பவர் தனது மனைவி கோபம் வந்தால் தன்னை மோசமாக தாக்குவதாக பலமுறை காவல்துறையில் முறைப்பாடு அளித்தும் அவர்கள் அதனை கணக்கில் எடுக்கவில்லை.

இந்த நிலையில்,

அவர் அடுத்த கட்டமாக நீதிமன்ற படியேறினார். இதற்கு ஆதாரத்தை சேகரிக்க முற்பட்டார்.

மனைவி தன்னை தாக்குவதுதான் ஒரே முக்கிய ஆதாரம்.

ஆனால்,

கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு அவர் அடிப்பதால்,

வெளியே யாருக்கும் இதை பற்றி தெரிய வாய்ப்பில்லை என்பதால்,

வீட்டிற்குள்ளேயே மனைவிக்கு தெரியாமல் இரகசிய கமராக்களை பொருத்தினார் அஜித்.

வழக்கம்போல மனைவி தனது சுயரூபத்தை காட்டினார்.

அதிபரும் கிரிக்கெட் மட்டை, பூரி கட்டை, என பல வித ஆயுதங்களால் அடிவாங்கியதை விதவிதமாக சிசிடிவி மூலம் பதிவு செய்தார்.

அந்த ஆதாரத்தை எடுத்துக் கொணடு நீதிமன்றுக்கு போனார்.

நீதிபதியிடம் வீடியோவை காட்டினார் அந்த வீடியோ காட்சிகளை பார்த்து நீதிபதியே அரண்டு போய் விட்டார்.

நீதிமன்றமே அந்த வீடியோவை பார்த்து அதிர்ந்தது.

இதுதொடர்பாக தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இறுதியில்,

மனைவியால் தாக்குதலுக்குள்ளாகி தினம் தினம் சித்திரவதைக்கு உள்ளாகும் அஜித்துக்கு பாதுகாப்பு அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த சிசிடிவி காட்சிதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *