விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் – இன்றிலிருந்து ஆரம்பமாகும் நடவடிக்கை

விவசாயிகளிடமிருந்து சாதாரண நெல் கொள்வனவு இன்று முதல் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“நெல் விவசாயிகளுக்கு நிர்ணய விலை இல்லை என நான் எல்லா இடங்களிலும் கூறுகின்றேன்.

விவசாயிகளுக்கு அதிக நீதி கிடைக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

அமைச்சரவையிலும் விவாதித்தேன். அதற்காக பல அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பித்துள்ளேன்.

இம்முறை நெல்லை கொள்வனவு செய்தது விவசாய அமைச்சோ அல்லது நெல் சந்தைப்படுத்தல் சபையோ இல்லை.

இம்முறை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் நெல்லை அரசு கொள்முதல் செய்து உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படும் மக்களுக்கு இலவசமாக வழங்கியது.

சீன உரங்களை இலங்கைக்கு கொண்டு வருவது குறித்து முழுமையான அறிக்கையை தயாரித்து வருகிறோம்.

நாங்கள் எதையும் மறைக்கவில்லை. நாங்கள் யாரையும் பாதுகாக்க முயற்சிக்கவில்லை. இது தொடர்பாக பெறப்பட்ட தகவல்களை கோப் குழு மூலம் முன்வைப்போம்.

மலத்தை உரம் என்று சொல்லி நாள் முழுவதும் உரம் பற்றி பேச வேண்டியதில்லை. ஒன்றும் மறைக்கப்படவில்லை.

இது தொடர்பான முழுமையான அறிக்கை எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *