விராட் கோலியின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சொத்து மதிப்புக்கள் மற்றும் அவரது வருமானங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்களில் விராட் கோலிக்கு தனி இடம் உண்டு.

இன்ஸ்டாகிராமில் மட்டும் விராட் கோலியை 253 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

இந்திய அணியின் முக்கிய வீரராக உள்ள விராட் கோலி இந்திய மதிப்பில் ஆண்டுக்கு 7 கோடியை ஊதியமாக பெறுகிறார்.

அதே சமயத்தில்,

ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய மதிப்பில் 15 இலட்சம் ரூபாவும்,

ஒருநாள் போட்டிக்கு 6 இலட்சம் ரூபாவும்,

டி 20 போட்டிக்கு 3 இலட்சமும் ஊதியம் பெறுகிறார்.

ஐ.பி.எல் தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு விளையாடும் கோலிக்கு இந்திய மதிப்பில் ஆண்டுக்கு 15 கோடி வழங்கப்படுகிறது.

கிரிக்கெட்டை தவிர்த்து சில சுற்றுலா விடுதிகளையும் விராட் கோலி நடத்தி வருகிறார்.

குறிப்பாக ப்ளூ ட்ரைப், எம்.பி.எல், ஸ்போர்ட்ஸ் கான்வோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விராட் கோலி உரிமையாளராக உள்ளார்.

இதேவேளை,

ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்கு இந்திய மதிப்பில் 7.50 கோடி முதல் 10 கோடி வரை விராட் கோலி வருமானமாக பெறுகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஒவ்வொரு பதிவுகளுக்கும் இந்திய மதிப்பில் 8.9 கோடி அவருக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

அதேசமயத்தில் டுவிட்டரில் ஒரு பதிவிற்கு இந்திய மதிப்பில் 2.5 கோடியை கோலி பெறுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

மும்பையில் உள்ள கோலியின் வீடு இந்திய மதிப்பில் 34 கோடி ரூபா என்றும், குர்கான் வீடு 80 கோடி ரூபா என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக விராட் கோலியின் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 1,000 கோடியை தாண்டியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *