இலங்கை மக்களுக்கு கிடைக்கும் 700 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித்திட்டம்…!

உலக வங்கி இலங்கைக்கான வரவு செலவுத் திட்ட மற்றும் நலன்புரி உதவியாக 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை அங்கீகரித்துள்ளது.

குறித்த நிதியில் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரவு செலவு திட்ட உதவிக்காகவும் எஞ்சிய 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நலன்புரி உதவிக்காகவும் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட அணுகுமுறையின் மூலம், உலக வங்கி குழுவின் மூலோபாயம் ஆரம்பகால பொருளாதார ஸ்திரப்படுத்தல், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என உலக வங்கியின் இலங்கைக்கான இயக்குனர் (Faris Hadad-Zervos) அறிக்கையொன்றின் மூலமாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த சீர்திருத்தங்கள் நாட்டை மீண்டும் பசுமையான வளர்ச்சியை நோக்கிய பாதையில் கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *