#President

LatestNewsTOP STORIES

பத‌வி விலகல் தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள முக்கிய தகவ‌ல்!!

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஆளும் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் சற்று முன்னர் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.   அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த கலந்துரையாடலின் போது மகிந்த ராஜபக்ச முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதன்போது, தான் பதவி விலகப் போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் அறிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   Read More

Read More
LatestNewsTOP STORIES

கண்டியிலிருந்து கொழும்பு வரை பாரிய பாதயாத்திரை!!

அரச தலைவர் மற்றும் அரசாங்கத்தை பதவி விலக வலியுறுத்தி எதிர்வரும் 26 ஆம் திகதி கண்டியில் இருந்து கொழும்பு வரை பாரிய பாதயாத்திரை ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கவுள்ளது. இது சுதந்திரப் போராட்டத்தின் அணிவகுப்பு என்று அழைக்கப்படுகிறது. நடைபவனியின் இறுதியில் மே 1ஆம் திகதி கொழும்பில் பாரிய பேரணியை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More
LatestNewsTOP STORIES

ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் உருவானது ‘கோட்டா கோ கிராமம்’!!

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபயவை பதவி விலகுமாறு வலியுறுத்தி அரச தலைவர் செயலகத்திற்கு எதிரில் நடைபெறும் எதிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில், ஆர்ப்பாட்டகாரர்கள் நேற்றைய தினம் அந்த இடத்தில் பல தற்காலிக கூடாரங்களை அமைத்துள்ளனர். அவற்றில் ஓய்வெடுக்கும் கூடாரங்கள், மருத்துவ வசதி கூடாரம், உணவைப் பெற்றுக்கொள்ளும் கூடாரம் என்பன அடங்கும். ஆர்ப்பாட்டகாரர்கள் தற்காலிக கழிவறைகளையும் அமைத்துள்ளனர். அத்துடன் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு “கோட்டா கோ கிராமம்” என பெயரிட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய Read More

Read More
LatestNewsTOP STORIES

போராட்டத்தின் காரணமாக 39 மில்லியன் ரூபா இழப்பு….. அஜித் ரோஹன!!

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் அமைந்திருந்த மிரிஹான பகுதியில் ஏற்பட்ட போராட்டத்தின் காரணமாக 39 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் 53 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 18 விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட 24 காவல்துறையினர் காயமடைந்துள்ளதாகவும் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறும் ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் பொதுக்கள் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் களுபோவில, ஸ்ரீஜயவர்தனபுர மற்றும் கொழும்பு Read More

Read More
LatestNews

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல்!!

அரச தலைவரின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தற்போது பிரதமரின் செயலாளராக உள்ள காமினி செனரத், அரச தலைவரின் புதிய செயலாளராக நியமிக்கப்படுவார் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அரச தலைவரின் புதிய செயலாளராக நியமிக்கப்படவுள்ள காமினி செனரத், அரச தலைவராக மகிந்த ராஜபக்ச இருந்த போது, அரச தலைவரின் மேலதிக செயலாளராகவும், பிரதம அதிபராகவும் கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையில் அனுபவம் Read More

Read More
LatestNews

ஒக்டோபர் 31 அதிகாலை 4 மணிக்கு தளரவுள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள்…. ஜனாதிபதி எடுத்துள்ள முக்கிய தீர்மானங்கள்!!

தற்போது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலை 4மணிக்குப் பின்னர் நீக்குவதற்கு கொவிட் செயலணி தீர்மானித்துள்ளது. புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார். இன்று காலை காணொளி தொழில்நுட்பம் ஊடாக கொவிட் தடுப்புக் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது மேற்கொள்ள முடிவுகள் வருமாறு, * நடைமுறையில் இருந்த மாகாணங்களுக்கு Read More

Read More
LatestNews

நாளை முக்கிய முடிவை எடுக்க போகும் கோட்டாபய!!

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்சு சட்டத்தை நீடிக்கலாமா, என்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (வெள்ளிக்கிழமை) முடிவு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொவிட் செயலணி யின் வழக்கமான சந்திப்பு, நாளை (03) ஜனாதிபதி தலைமையில், ந​டைபெறும். இதன்போதே ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பாக தற்போதைய நிலைமையை ஜனாதிபதி மதிப்பாய்வு செய்வதுடன் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. Read More

Read More
LatestNews

ஜனாதிபதி வழங்கிய உத்தரவு – இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்!!

நாட்டில் மக்களுக்கும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கான செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மூன்றாவது தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை நாட்டில் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு Read More

Read More
LatestNews

பல எதிர்பார்ப்புகளுடன் கோட்டாபயவின் விசேட உரை!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், ஜனாதிபதி இன்றைய தினம் உரையாற்றவுள்ளார். முன்னதாக சுகாதார பிரிவினர், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள், மல்பத்து பீடம், எதிர் கட்சிகள் என்பன பல தடவை நாட்டை முடக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தநிலையில், ஜனாதிபதியின் விசேட உரை இன்று இடம்பெறவுள்ளமை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More
LatestNews

இன்று நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று  நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா பரவல், நாட்டின் பொருளாதாரம் மற்றும் நாட்டை முடக்குவதில் உள்ள சிக்கல் நிலை என்பன தொடர்பில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேநேரம், ஜனாதிபதி நாளைய தினம் கண்டிக்கு சென்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மாநாயக்க தேரர்களை சந்தித்து, நாட்டின் நிலைமை குறித்து தெளிவுபடுத்த உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும், ஜனாதிபதி, நாட்டு Read More

Read More