ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல்!!

அரச தலைவரின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில்,

தற்போது பிரதமரின் செயலாளராக உள்ள காமினி செனரத், அரச தலைவரின் புதிய செயலாளராக நியமிக்கப்படுவார் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அரச தலைவரின் புதிய செயலாளராக நியமிக்கப்படவுள்ள காமினி செனரத், அரச தலைவராக மகிந்த ராஜபக்ச இருந்த போது, அரச தலைவரின் மேலதிக செயலாளராகவும், பிரதம அதிபராகவும் கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையில் அனுபவம் வாய்ந்த அதிகாரியாவார்.

இதேவேளை,

பி.பீ. ஜயசுந்தரவின் நடவடிக்கைகள் அண்மைய நாட்களில் அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்களால் விமர்சிக்கப்பட்டது.

குறிப்பாக, அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் பி.பீ. ஜயசுந்தர கடுமையாக விமர்சித்திருந்தார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச அரச தலைவராக இருந்த காலத்தில் தற்போதைய கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச அப்போது பி.பீ. ஜயசுந்தரவை பொருளாதார கொலையாளியாக என அடையாளப்படுத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் அரச தலைவரின் ஊடகப் பிரிவு இது தொடர்பில் தற்போது வரை எந்த தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எது எப்படி இருந்த போதிலும் அரச தலைவரின் செயலாளராக பதவி வகிக்கும் பீ.பி. ஜெயசுந்தரவுடன் முரண்பாடுகளை கொண்டுள்ளவர்கள் அவரை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அரசியல் ரீதியாக செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஜெயசுதந்தரவை மீறி அரச தலைவரை நெருங்க முடியாமல் இருப்பதே இதற்கு காரணம் எனவும் அரசியல் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக அவர் பதவி விலக போகிறார் என ஜெயசுந்தரவுக்கு எதிராக ஊடகங்கள் வாயிலாக அவர்கள் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *