பதவி விலகல் தொடர்பில் மஹிந்த வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!!
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஆளும் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் சற்று முன்னர் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது மகிந்த ராஜபக்ச முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது,
தான் பதவி விலகப் போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் அறிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் தெரியவருகையில்,
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் அரசாங்கமும் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என மாகாண சபை குழுவின் பிரதிநிதிகள் பிரேரணை ஒன்றை கையளித்திருந்தனர்.
இதனையடுத்தே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,
தற்போதைய தேசிய நெருக்கடியை குறுகிய காலத்தில் தீர்க்க முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது,
மாகாண சபை குழுவின் பிரதிநிதிகள் தமது பிரேரணையை கோட்டாபய ராஜபக்சவிடம் தெரிவிக்கவும் தீர்மானித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
எதிர்காலத்தில் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டியது அவசியமானது என பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.