பல எதிர்பார்ப்புகளுடன் கோட்டாபயவின் விசேட உரை!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், ஜனாதிபதி இன்றைய தினம் உரையாற்றவுள்ளார்.
முன்னதாக சுகாதார பிரிவினர், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள், மல்பத்து பீடம், எதிர் கட்சிகள் என்பன பல தடவை நாட்டை முடக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தநிலையில், ஜனாதிபதியின் விசேட உரை இன்று இடம்பெறவுள்ளமை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.