#Police

LatestNews

வீடொன்றின் மதில் சுவரை இடுத்து உள்ளே சென்ற கார்….. ஆபத்தான நிலையில் இருவர்!!

மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்  இன்று காலை 9 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீட்டு வளவிற்குள் புகுந்ததில்  விபத்திற்குள்ளாகிய இருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து இடம்பெற்ற பகுதியில் அமைந்துள்ள தங்களது வீட்டு வாசலில் நின்று கதைத்துக் கொண்டிருந்த இவரே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் Read More

Read More
LatestNews

ஒரே இரவில் ஐந்து கடைகள் ஓடு பிரித்து கொள்ளை!!

வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ள 5 விற்பனை நிலையங்களில் ஒரே இரவில் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வவுனியா மில்வீதி, சூசைப்பிள்ளையார்குளம் வீதி, கந்தசாமிகோவில் வீதி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களிற்கு சென்ற திருடர்கள் அவற்றின் கூரைத்தகடு மற்றும் வாயிலை உடைத்து நுழைந்துள்ளதுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். நேற்றைய தினம் இரவு குறித்த கடைகளை அதன் உரிமையாளர்கள் பூட்டிச் சென்றிருந்த நிலையில் இன்று காலை மீண்டும் திறப்பதற்காக சென்ற போது கடைகள் உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர். Read More

Read More
LatestNews

ஆசிரியர்கள் சரமாரியாக தாக்கியதால் கவலைக்கிடமான நிலையிலுள்ள சா/தர பரீடசைக்கு தோற்றவுள்ள தமிழ் மாணவர்கள்!!

நுவரெலியா தமிழ் பாடசாலை ஒன்றில் சாதாரண தரம் பரீட்சை பெற உள்ள மாணவர்களை ஆசிரியர்கள் கூட்டிணைந்து தாக்கியுள்ளதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் பலத்த காயங்களுக்கு உள்ளான மூன்று மாணவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இத் தாக்குதல் தொடர்பாக தலவாக்கலை காவல்துறை முறைப்பாடு செய்ய சென்றவர்களுக்கு தாக்கப்பட்ட ஆசிரியர்களின் பெயர் விபரம் தெரியாததால் திருப்பி அனுப்பப்பட்டன . மாணவர்களை தாக்கிய ஆசிரியர்களின் Read More

Read More
LatestNews

16 வருடங்களின் பின்னர் திருடன் கைது…… வடமரட்சியில் சம்பவம்!!

16 வருடங்களுக்கு முன்னர் திருட்டில் ஈடுபட்டவரை காத்திருந்து நெல்லியடி  கைது செய்துள்ளனர். நெல்லியடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் மகா வித்தியாலயத்தில் கடந்த 2005ம் ஆண்டு இரவு நேர காவலாளியை கட்டிவைத்து சில பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. இது தொடர்பாக கைவிரல் அடையாளங்களை பரிசோதித்து வைத்திருந்த பொலீஸார் நேற்று வல்லை பகுதியில் வைத்து குறித்த நபரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், குறித்த நபர் நவாலி தெற்கு மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More
LatestNews

முல்லைதீவில் சற்றுமுன் பதிவானது முதலாவது வெடிப்பு சம்பவம்!!

முல்லைத்தீவு மாவட்டத்திலும் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடொன்றிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 11 மணியளவில் சமையல் செய்துகொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அருகில் யாரும் இல்லாததனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாடளாவிய ரீதியில் பல்வேறு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகிய Read More

Read More
LatestNews

மாடு மேய்க்கச் சென்றவர் குளவி கொட்டி மரணம்!!

திருகோணமலை – தென்னமரவாடி பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் தென்னமரவாடி பகுதியைச் சேர்ந்த கனகசபை குகநாதன் (69வயது) எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வீட்டிலிருந்து மாடு மேய்க்கச் சென்ற போது மரத்திலிருந்து குளவி கூடு கலைந்து குறித்த நபரை குத்தியதாகவும் இதனை அடுத்து புல்மோட்டை தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபரின் சடலம் தற்போது புல்மோட்டை தள Read More

Read More
LatestNews

தடியால் இளம் குடும்பஸ்தர் அடித்துக்கொலை!!

கிளிநொச்சி சம்புக்குளம் பகுதியில் இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தடியால் தாக்கப்பட்டு ஓருவர் உயிரிழந்துள்ளார். மேலும் தெரியவருகையில், தருமபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் சம்புக்குளம் பகுதியில் நேற்று மாலை 4: 30 மணியளவில் இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் காரணமாக தடியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் நோயாளர் காவுவண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஒரு Read More

Read More
LatestNews

சாவகச்சேரியில் சடலமாக மீட்கப்படடர்….. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்!!

பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சுப்பிரமணியம் சிவபாலன் (51) என்பவதே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் தெரியவருகையில், சாவகச்சேரி தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் வெளிநாட்டவர் ஒருவருடைய தென்னம் காணியை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே தென்னம் தோப்பிற்குள் அமைந்துள்ள வீடடடிலிருந்தே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வீட்டில் நடமாட்டமில்லாததை அவதானித்த அயல் வீட்டுக்காரர் வீட்டை எட்டிப் Read More

Read More
LatestNews

இவர்கள் தொடர்பில் யாருக்காவது தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கவும்….. யாழ். காவல் நிலைய பொறுப்பதிகாரி!!

யாழ். காவல் நிலைய பொறுப்பதிகாரி பொது மக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை இன்றையதினம் விடுத்துள்ளார். அந்த அறிவிப்பில், கீழ் உள்ள படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் தொடர்பில் யாருக்காவது தகவல் தெரிந்தால் யாழ். காவல் நிலையத்துக்கு அல்லது தனக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளார்.   குறித்த இரண்டு நபர்களும் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் நிலையில் இவர்கள் தொடர்பான தகவல்களை ஏதாவது தெரிந்தால், 0718591329 என்கிற யாழ். காவல் நிலைய பொறுப்பதிகாரியின் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More
LatestNews

முல்லைத்தீவில் கடவுளின் பெயரை கூறி “சாபம் கிடைக்கும் என மிரட்டி” மதம் மாற்ற முயற்சித்ததாக போலீஸில் புகார்….. மூவர் வாகனத்துடன் கைது!!

முல்லைத்தீவில் மதம் மாற்ற முயற்சியில் ஈடுபட்டிருந்த குழுவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கிழவன்குளம் கிராமத்தில் மதம் மாற்றச் சென்ற கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த ஒரு குழுவினர் தன்னை பேசி, அச்சுறுத்தல் விடுத்ததாக மாங்குளம் காவல் நிலையத்தில் நபர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். அதனையடுத்து மாங்குளம் காவல்துறையினர் சந்தேக நபர்கள் Read More

Read More