ஆசிரியர்கள் சரமாரியாக தாக்கியதால் கவலைக்கிடமான நிலையிலுள்ள சா/தர பரீடசைக்கு தோற்றவுள்ள தமிழ் மாணவர்கள்!!

நுவரெலியா தமிழ் பாடசாலை ஒன்றில் சாதாரண தரம் பரீட்சை பெற உள்ள மாணவர்களை ஆசிரியர்கள் கூட்டிணைந்து தாக்கியுள்ளதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் பலத்த காயங்களுக்கு உள்ளான மூன்று மாணவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இத் தாக்குதல் தொடர்பாக தலவாக்கலை காவல்துறை முறைப்பாடு செய்ய சென்றவர்களுக்கு தாக்கப்பட்ட ஆசிரியர்களின் பெயர் விபரம் தெரியாததால் திருப்பி அனுப்பப்பட்டன .

மாணவர்களை தாக்கிய ஆசிரியர்களின் சரியான பெயர் விபரங்களை சேகரித்து வரும் படி தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பாடசாலை மாணவர்களை ஆசிரியர்கள் தாக்குவதற்கான காரணம் என்னவென்று தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களின் பெற்றோர்கள் கொந்தழிக்கின்றனர்.

மூன்று மாணவர்கள் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளனர் இது தொடர்பாக தலவாக்கலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பெற்றோர்களுக்கு தொலைபேசி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *