சாவகச்சேரியில் சடலமாக மீட்கப்படடர்….. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்!!

பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சுப்பிரமணியம் சிவபாலன் (51) என்பவதே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் தெரியவருகையில்,

சாவகச்சேரி தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் வெளிநாட்டவர் ஒருவருடைய தென்னம் காணியை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே தென்னம் தோப்பிற்குள் அமைந்துள்ள வீடடடிலிருந்தே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் நடமாட்டமில்லாததை அவதானித்த அயல் வீட்டுக்காரர் வீட்டை எட்டிப் பார்த்த பொழுது துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனையடுத்து உடனடியாக சாவகச்சேரி காவல்துநையினருக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளனர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *