தடியால் இளம் குடும்பஸ்தர் அடித்துக்கொலை!!
கிளிநொச்சி சம்புக்குளம் பகுதியில் இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தடியால் தாக்கப்பட்டு ஓருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் தெரியவருகையில்,
தருமபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் சம்புக்குளம் பகுதியில் நேற்று மாலை 4: 30 மணியளவில் இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் காரணமாக தடியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் நோயாளர் காவுவண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தந்தையான இராமையா. இராமஜெயம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் சடலம் பிரேதபரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.