16 வருடங்களின் பின்னர் திருடன் கைது…… வடமரட்சியில் சம்பவம்!!
16 வருடங்களுக்கு முன்னர் திருட்டில் ஈடுபட்டவரை காத்திருந்து நெல்லியடி கைது செய்துள்ளனர்.
நெல்லியடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கரணவாய் மகா வித்தியாலயத்தில் கடந்த 2005ம் ஆண்டு இரவு நேர காவலாளியை கட்டிவைத்து சில பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கைவிரல் அடையாளங்களை பரிசோதித்து வைத்திருந்த பொலீஸார் நேற்று வல்லை பகுதியில் வைத்து குறித்த நபரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்,
குறித்த நபர் நவாலி தெற்கு மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.