#Diesel

LatestNewsTOP STORIES

யாழில் மாபெரும் கண்டனப்பேரணிக்கு அழைப்பு!!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கண்டனப்பேரணி இடம்பெறவுள்ளது.   ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் இதற்கான அறிவிப்பை விடுத்துள்ளார்.   கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியைக் கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சாரம்,பெற்றோல், டீசல், மண்ணெண்னை, சமையல் எரிவாயு போன்ற பொருட்களின் தட்டுப்பாட்டு மற்றும் விலை உயர்வினைக் கண்டித்தே இப்போராட்டம் இடம்பெறவுள்ளது.   நாளை மறுதினம் (07/04/2022) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு Read More

Read More
LatestNewsTOP STORIES

மீண்டும் நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட்து!!

அனைத்து ரக பெற்றோலின் விலைகளையும் இன்று (25/03/2022) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, அனைத்து ரக பெற்றோலின் சில்லறை விலைகளும் லீற்றருக்கு 49 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 303 ரூபா என்பதுடன், ஒக்டேன் 95 ரக ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 332 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read More
LatestNewsTOP STORIES

எரிபாருள் பெறுவதில் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிவு!!

தற்போது தட்டுப்பாடாக உள்ள எரிபாருளை பெறுவதில் ஏற்பட்ட மோதல் இறுதியில் கொலையில் முடிவடைந்தது. நிட்டம்புவ – ஹொரகொல்ல பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பு – 14 பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று(20) ஹொரகொல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காத்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது முச்சக்கரவண்டியின் சாரதி, எரிபொருளை பெற்று Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

மசகு எண்ணெயின் விலை உலக சந்தையில் அதிகரிப்பு….. மீண்டும் அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை!!

உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை மூன்று அமெரிக்க டொலரால் அதிகரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் இன்றைய விலை 111.37 அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமெரிக்காவின் டபிள்யூ.டீ.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108.24 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது எரிபொருள் சுத்திகரிப்பிற்காக பயன்படும் மசகு எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது.

Read More
indiaLatestNewsTOP STORIES

இந்தியாவின் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின்கீழ் இலங்கையை வந்தடைந்த எரிபொருள் கப்பல்!!

இந்தியாவின் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவித் திட்டத்தின் கீழ், இலங்கைக்கு முதலாவது டீசல் ஏற்றிய கப்பல் வருகை தந்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.   இதன்படி, 35,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல், கொழும்பு துறைமுகத்தை அண்மித்துள்ளது.   குறித்த கப்பலிலிருந்து டீசலை தரையிறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுதாபனம் மேலும் தெரிவித்துள்ளது.   இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இந்தியாவினால் முதல் கட்டமாக 500 மில்லியன் அமெரிக்க Read More

Read More
LatestNewsTOP STORIES

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மயங்கி விழுந்த பெண்ணால் பரபரப்பு!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று எரிபொருளை கொள்வனவு செய்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் சமையல் எரிவாயு கொள்கலன் விற்பனை நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசைகளில் மக்கள் பல மணி நேரம் நிற்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. சில இடங்களில் மக்கள் இரவு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசைகளில் நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நகர புறங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் Read More

Read More
LatestNewsTOP STORIES

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதல்….. காணொளி!!

கெஸ்பேவயில்(Kesbewa) உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் உரிமையாளருக்கும் நுகர்வோர் பலருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிக நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்த நுகர்வோர் உரிமையாளரை எதிர்த்து கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். இதற்கிடையில், எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர் ஒருவர் தலையிட்டதால், அந்த நபருக்கும் நுகர்வோருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் கிளர்ச்சியடைந்த நுகர்வோர் பலரால் ஊழியர் தாக்கப்பட்டுள்ளார். மோதலை கட்டுப்படுத்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு Read More

Read More
LatestNewsTOP STORIES

அறுவடை செய்த மரக்கறிகளை கொள்வனவு செய்ய வியாபாரிகள் வரவில்லை – காரணம் எரிபொருள் இல்லை….. விவசாயிகள் அங்கலாய்ப்பு!!

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருகை தரும் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தக சங்கத்தின் தலைவர் யூ.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். ஏனைய நாட்களில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு 2.5 மில்லியன் முதல் 3 மில்லியன் கிலோ வரையான மரக்கறிகள் கிடைக்கும். ஆனால், இன்றைய நாட்களில் 1.5 மில்லியன் கிலோ மரக்கறிகள் கூட கிடைப்பதில்லை என Read More

Read More
LatestNewsTOP STORIES

எரிபொருட்களின் புதிய விலை மற்றும் விபரங்கள்!!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை 77 ரூபாவாலும் ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை 76 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் டீசலின் விலை 55 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுப்பர் டீசலின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்புக்கு அமைய ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 254 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை 283 Read More

Read More
LatestNewsTOP STORIES

நாளை மறுதினம் முதல் தனியார் பேருந்து சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும்….. தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்!!

தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) நாளை பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது. டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்து கட்டணத்தை திருத்துவது அல்லது டீசல் மானியம் வழங்குவது குறித்து கலந்துரையாடப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை 20 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டால், தற்போதுள்ள கட்டணத்தையே தொடர்ந்தும் பேணுவதற்கு பேருந்து உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், எரிபொருள் விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளதால் இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். ஆகவே Read More

Read More