எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதல்….. காணொளி!!
கெஸ்பேவயில்(Kesbewa) உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் உரிமையாளருக்கும் நுகர்வோர் பலருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிக நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்த நுகர்வோர் உரிமையாளரை எதிர்த்து கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.
இதற்கிடையில்,
எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர் ஒருவர் தலையிட்டதால், அந்த நபருக்கும் நுகர்வோருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் பின்னர் கிளர்ச்சியடைந்த நுகர்வோர் பலரால் ஊழியர் தாக்கப்பட்டுள்ளார்.
மோதலை கட்டுப்படுத்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.
இதேவேளை,
இன்றும் நாட்டின் பல பிரதேசங்களில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மக்கள் நிற்கின்றனர்.
தேவைக்கு மேலதிகமான எரிபொருள்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் கொள்கலன்களுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிற்பதால் நிலைய உரிமையாளருக்கும் நுகர்வோரிற்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன.
பொதுமக்களுக்கு கொள்கலன்களில் எரிபொருளை வழங்குவதைத் தவிர்க்குமாறு அரசாங்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும் மக்கள் எரிபொருள் கொள்கலன்களுடன் காணப்படுவதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாக்குவாதங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.