கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட்து மக்கள் வங்கி….. சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம்!!

மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சீன தூதரகமும் உறுதிப்படுத்தியுள்ளது.   இரண்டு தரப்புக்களுக்கும் இடையிலான கடன் கடிதம் மற்றும் ஒப்பந்தங்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள தவறியமையே இவ்வாறு இணைப்பதற்கு காரணம் எனவும் மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் இது தொடர்பான தீர்மானத்தை சீன தூதரகம், சீனாவின் வர்த்தக அமைச்சுக்கும் சமர்ப்பித்துள்ளது. இந்த நிலையில் ஒப்பந்தக் கடமை, வணிக விதிகள் மற்றும் சர்வதேச வர்த்தக வழக்கங்களை மீறி, இலங்கை Read More

Read more

7வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது போல….. வீட்டுப்பாடம் கொடுப்பதையும் ரத்துசெய்ய புதிய சட்டம் வகுக்கவுள்ள சீனா!!

சீனாவில் ஏற்கனவே 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டிருந்ததைப் போலவே தற்போது வீட்டுப்பாடமும் ரத்து செய்யப்பட்டுள்ளது என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா காலத்தில் மற்ற நாடுகளை போல சீனாவிலும் பாடசாலை குழந்தைகளுக்கு இணைய வசதிகள்  மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டன. இதில் மாணவர்களுக்கு கடும் மன அழுத்தம் ஏற்பட்டு அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில் பாடசாலைகள் திறக்கப்பட்டது. ஆனாலும் வீட்டுப்பாடங்கள் அதிகம் கொடுக்கப்பட்டது. இதனால் மாணவர்கள், குறிப்பாக Read More

Read more

சீனத்தடுப்பூசி பெற்றவர்களுக்கு சர்வதேசம் விடுத்த முக்கிய அறிவிப்பு!!

சீனாவில் தயாரிக்கப்பட்ட சைனோபாம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட, வயது முதிர்ந்தவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவடைவதாக சர்வதேச ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். அந்த வகையில், சைனோபாம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, 3 ஆம் தடுப்பூசியை விரைவாக செலுத்துமாறு தடுப்பூசி ஏற்றம் தொடர்பான விசேட ஆலோசனைக் குழு கோரிக்கையை விடுத்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கையில் Read More

Read more

எதிர்வம் டிசம்பர் இல் பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ள கொழும்பு துறைமுக நகரம்!!

எதிர்வம் டிசம்பர் மாதம் கொழும்பு துறைமுக நகரத்தை பொது மக்களின் பார்வைக்காக திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மாத்திரமல்லாது உலக பொருளாதாரத்தில் போட்டியிடும் நோக்கில் உருவாக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரம், கடலை நிரப்பி செயற்கையாக உருவாக்கப்பட்ட 269 ஹெக்டேயர் நிலப்பரப்பை கொண்ட பிரதேசமாகும். இதில், தெற்காசியாவில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமைந்துள்ள துறைமுக நகரில் கவர்ச்சிகரமான வீடுகள் மற்றும் வர்த்தக மையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. சைனா ஹாபர் இஞ்சினியரிங் கம்பனி இந்த துறைமுக நகரத்தை Read More

Read more

7800 கிலோ எடை வரை ஆயுதங்களை எடுத்துக்கொண்டு 800km/h கதியில் தொடர்ந்து 20 மணி நேரம் பறக்ககூடிய சீனாவின் ஆளில்லா விமானம்!!

சீனா தான் உருவாக்கிய தனது பிரமாண்டமான புதிய ஆளில்லா உளவு விமானத்தை பார்வைக்கு வைத்துள்ளது. அந்நாட்டில் நடக்கும் விமானக் கண்காட்சியில் CH-6 என்று பெயரிடப்பட்டுள்ள ட்ரோன் வைக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச உயரத்திலும், தூரத்தில் உள்ள இலக்கை குறிதவறாமல் தாக்குவதில் நிகரற்றும் CH-6 விளங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மணிக்கு 800 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து 20 மணி நேரம் பறக்கமுடியும். இந்த உளவு விமானத்தில் 7 ஆயிரத்து 800 கிலோ எடை வரை ஆயுதங்களை எடுத்துச் செல்லமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

மன்னாரில் 267 Billion USD பெறுமதியான கனிய வளமும், எரிபொருள் வளமும்….!!!!

மன்னார் மாவட்டத்தில் மறைந்துள்ள கனிய மற்றும் எரிபொருள் வளங்களை சரியான முறையில் முகாமை செய்தால் அதிக இலாபத்தை இலங்கை அடையலாம் எனவும், அவற்றைப் பயன்படுத்தி நாட்டின் மொத்த கடன் சுமையையும் செலுத்திவிடலாம் எனவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த எரிசக்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றபோது அவர் இதனைக்குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 267 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கனிய வளமும், Read More

Read more

சீனாவில் இருந்து 96,000 மெட்ரிக் தொன் பசளை இறக்குமதிக்கு திடடம்!!

நாட்டுக்கு தேவையான 96,000 மெட்ரிக் தொன் சேதன பசளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக சேதன களை உற்பத்தி அபிவிருத்தி மற்றும் விநியோக இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் மகேஸ் கம்மன்பில தெரிவித்துள்ளார். இதன்கீழ் 10% நைட்ரிஜன் உள்ளடங்கிய சேதன பசளை, நைட்ரிஜன் 15% மற்றும் அமோனிய அமிலம் 80% அடங்கிய சேதன பசளை 3000 மெட்ரிக் தொன் இறக்குமதி செய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார். சீனாவில் இருந்து இந்த சேதன பசளை இறக்குமதி செய்யப்படுவதாகவும் அடுத்த மாதம் 25ஆம் Read More

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சைனோபாம் தடுப்பூசிகள்!!

சீனாவிலிருந்து மேலும் 2.3 மில்லியன் டோஸ் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன. அத்துடன் சீன இராணுவத்தினரால் இலங்கை முப்படையினருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 3 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளும் நாட்டை வந்தடைந்துள்ளது. இதேவேளை நாடளாவிய ரீதியில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

சீனாவுடன் கைச்சாத்தானது மற்றுமோர் உடன்படிக்கை!!

agreement கடுமையான அந்நிய செலாவணி இருப்புத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கின்ற நிலையில் 61.5 பில்லியன் ரூபா பெறுமதியான உடன்படிக்கையொன்றை சீனாவுடன் ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்துகொண்டுள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதாக கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. சீன அபிவிருத்தி வங்கி மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கமும் 61.5 பில்லியன் ரூபா உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளதாக ஸ்ரீலங்காவுக்கான சீன தூதரகம் தெரிவிக்கின்றது. இரண்டு வருட குத்தகை அடிப்படையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன Read More

Read more

சீன தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிரபல சிங்கள நடிகைக்கு தொற்றியது கொரோனா!!

பிரபல சிங்கள நடிகை ஷலனி தாரகாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தனது பேக்புக் பக்கத்தில் இதை அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. தன்னுடன் நடித்த பலருக்கு தொற்று இருப்பதையடுத்து, ஜூலை 31ஆம் திகதி முதல் தாம் சுயதனிமைப்படுத்தலில் இருப்பதாகவும், தமக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாகவும் குறிப்பிட்டார். மேலும், தான் சீனாவின் சினோபார்ம் இரண்டு தடுப்பூசிகளை பெற்றிருந்தாலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் Read More

Read more