கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட்து மக்கள் வங்கி….. சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம்!!

மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சீன தூதரகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

 

இரண்டு தரப்புக்களுக்கும் இடையிலான கடன் கடிதம் மற்றும் ஒப்பந்தங்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள தவறியமையே இவ்வாறு இணைப்பதற்கு காரணம் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் இது தொடர்பான தீர்மானத்தை சீன தூதரகம், சீனாவின் வர்த்தக அமைச்சுக்கும் சமர்ப்பித்துள்ளது.

இந்த நிலையில் ஒப்பந்தக் கடமை, வணிக விதிகள் மற்றும் சர்வதேச வர்த்தக வழக்கங்களை மீறி, இலங்கை மக்கள் வங்கி எல்/சி செலுத்தத் தவறிதன் மூலம், சீன நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையுடனான சர்வதேச வர்த்தகத்தில் இலங்கை மக்கள் வங்கியால் வழங்கப்பட்ட (கடன் கடிதம்) எல்/சியை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறு அனைத்து சீன நிறுவனங்களும் சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *