7800 கிலோ எடை வரை ஆயுதங்களை எடுத்துக்கொண்டு 800km/h கதியில் தொடர்ந்து 20 மணி நேரம் பறக்ககூடிய சீனாவின் ஆளில்லா விமானம்!!

சீனா தான் உருவாக்கிய தனது பிரமாண்டமான புதிய ஆளில்லா உளவு விமானத்தை பார்வைக்கு வைத்துள்ளது.

அந்நாட்டில் நடக்கும் விமானக் கண்காட்சியில் CH-6 என்று பெயரிடப்பட்டுள்ள ட்ரோன் வைக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச உயரத்திலும், தூரத்தில் உள்ள இலக்கை குறிதவறாமல் தாக்குவதில் நிகரற்றும் CH-6 விளங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மணிக்கு 800 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து 20 மணி நேரம் பறக்கமுடியும். இந்த உளவு விமானத்தில் 7 ஆயிரத்து 800 கிலோ எடை வரை ஆயுதங்களை எடுத்துச் செல்லமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *