‘தீ இது தளபதி.. பேர கேட்டா விசில் அடி…..’ இணையத்தை ஆக்கிரமிக்கும் வாரிசு பாடல்!!
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் தினத்தன்றுவெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.
வாரிசு படத்தின் 2வது பாடல் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி (இன்று) வெளியாகும் எனவும், இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக போஸ்டர் வெயிட்டு படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள தீ தளபதி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தீ தளபதி பேரகேட்ட விசில் அடி என்று தொடங்கும் இந்த பாடல் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.