இலங்கை எட்டிய மைல்கல்! தொடரும் அடுத்த முயற்சி!!
கொவிட் -19 தடுப்பூசி இயக்கத்தில் இலங்கை 11 மில்லியன் மைல்கல்லை எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
இலங்கையில் இதுவரை 11 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு (11,081,092) கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையில் 30 வயதிற்கு மேற்பட்ட மொத்த மக்கள் தொகையில் 96% க்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் கொவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸினைப் பெற்றுள்ளனர்
அதேநேரம் 30 வயதுக்கு மேற்பட்ட நாட்டின் மக்கள் தொகையில் 26% க்கும் அதிகமானோர் கொவிட் -19 தடுப்பூசியின் 2 ஆவது டோஸைப் பெற்றுள்ளனர்.