இன்னும் 18 மாதங்களில் இலங்கையில் “கேபிள் கார்கள்”!!

கேபிள் கார் திட்டம் அடுத்த 18 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Emirates Air Line cable car

நுவரெலியா நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமான கேபிள் கார் திட்டம் அண்மையில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுவீடன் வெளிநாட்டு உதவித் திட்டத்தின் கீழ் நானு ஓயாவிலிருந்து நுவரெலியா வரையிலான 4 கிலோமீற்றர் கேபிள் கார் திட்டத்திற்கு இரண்டு கட்டங்களாக நிதி வழங்கப்படவுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில்,

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க முதலீடாக நாட்டின் முதலாவது கேபிள் கார் திட்டம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *