Windows இல் இனி, Android Games….. வெளியீட்டு விபரங்கள்!!

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு கேம்களை எப்போது விண்டோஸ் இயங்குதளத்திற்கு கொண்டு வரும் என்ற விவரங்களை பார்ப்போம்.

விண்டோஸ் ஓ.எஸ். தளங்களில் ஆண்ட்ராய்டு கேம்களை அடுத்த ஆண்டு கொண்டுவர கூகுள் திட்டமிட்டுள்ளது. இதற்கென கூகுள் பிரத்யேக கூகுள் பிளே கேம்ஸ் செயலியை உருவாக்கி வருகிறது. இந்த செயலி விண்டோஸ் தளத்திற்கென உருவாகி இருக்கிறது. இது கூகுள் பிளேவில் உள்ள கேம்களை விண்டோஸ் லேப்டாப், டேப்லெட் மற்றும் கணினிகளில் விளையாட வழி செய்யும்.
இந்த அம்சம் வழங்கப்பட்டால் போன், டேப்லெட், குரோம்புக் மற்றும் விண்டோஸ் கணினிகளிடையே சீம்லெஸ் ஸ்விட்ச் செய்ய முடியும் என கேம்களுக்கான ஆண்ட்ராய்டு மற்றும் கூகுள் பிளே இயக்குனர் கிரெக் ஹார்டிரெல் தெரிவித்தார்.
ஒரு சாதனத்தில் விளையாடிய கேமினை, விட்ட இடத்தில் இருந்து மற்றொரு சாதனத்தில் விளையாட முடியும்.
கூகுள் பிளே கேம்ஸ் செயலியை கூகுள் வழங்குகிறது.
இது விண்டோஸ் 10 மற்றும் அதன் பின் வெளியான இயங்குதளங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
தற்போது இந்த செயலிக்கான டீசரை மட்டும் கூகுள் வெளியிட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *