2022ம் ஆண்டு கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்ற “ஸ்டேடியம் 974″….. முற்றிலுமாக இடித்து அளிக்கப்படவுள்ளது!!

2022ம் ஆண்டுக்கான கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்ற ஸ்டேடியம் 974 தற்போது இடிக்கப்பட உள்ளது.

2022ம் ஆண்டுக்கான கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில்

சூப்பர் 16 சுற்றில் தென் கொரிய அணிக்கு எதிராக பிரேசில் அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில்,

இந்த போட்டி நடைபெற்ற “மைதானம் 974” முற்றிலுமாக அகற்றப்பட உள்ளது.

உலக கோப்பைக்காக கட்டப்பட்ட இந்த ஸ்டேடியம் 974ல் இதுவரை மொத்தம் 7 உலக கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.

40000 இருக்கைகளின் தனித்துவமான எண்ணிக்கை கத்தாரின் சர்வதேச டயலிங் குறியீட்டில் இருந்து உருவானது.

அவற்றிலும் குறிப்பாக மைதானம் 974 பெயர் மைதானத்தை உருவாக்க பயன்படுத்தப்பட்ட கப்பல் கொள்கலன்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.

ரஷ்யா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தது போல,

உலகக் கோப்பை போட்டிகள் முடிந்த பிறகு பயன்படுத்தப்படாத மைதானத்தை விட்டுச் செல்வதைத் தவிர்ப்பதற்காகவும்,

சிக்கனமானதாக இருக்கவும் இந்த ஸ்டேடியம் மறுசுழற்சி முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த மைதானம் தனது இலக்குகளையும்,

நோக்கத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றியதால் கத்தார் உலக கோப்பை அதிகாரிகள் இதனை அகற்ற முடிவு செய்துள்ளனர்.

974 மைதானம் கண்ணை கவரும் பல வண்ண கப்பல் கொள்கலன்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்கலன்கள் கழிவறைகளையும், உட்புற அமைப்புகளையும் உருவாக்கியது.

உலக கோப்பைக்காக வடிவமைக்கப்பட்ட இந்த மைதானம் குளிரூட்டப்பட்டதல்ல.

 

எனவே,

போட்டிகள் மாலையில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன.

கப்பல் கொள்கலன்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட இந்த மைதானம் தொழில்துறை உணர்வைக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் பின்னர் மைதானத்தின் பாகங்கள் எங்கு செல்லும் என்பதை கத்தார் இன்னும் சரியாக வெளிப்படுத்தவில்லை.

 

இருப்பினும்,

எதிர்காலத்தில் பல சிறிய மைதானங்களை உருவாக்க இது பயன்படுத்தப்படலாம் என்று அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ரொனால்டோ, கைலியன் எம்பாப்பே மற்றும் நெய்மர் போன்றோர் மைதானத்தில் கோல் அடித்தனர்.

மொத்தம் 7 போட்டிகளில் இந்த மைதானம் 21 கோல்களை கண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *