வடக்கிலிருந்து மேலெழுந்துவந்த நட்ச்சத்திர வீரன் “டுக்சன் பியூஸ்” மாலைதீவில் மரணம்….. தற்கொலை என வதந்திகள்!!
மன்னாரை சொந்த இடமாக கொண்டவரும் இலங்கை உதைபந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் மாலைதீவில் உயிரிழந்துள்ளார்.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர்,
பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் (CD) தடுப்பாட்ட நுட்பத்துடன் விளையாடும் சிறந்த வீரராக இருந்தார்.
இலங்கை அணியின் தேசிய அணியில் இடம்பிடித்த இவர், காற்பந்து உலக கிண்ண கோப்பைக்கான (FIFA World Cup) தகுதிகாண் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அதே நேரம் இலங்கை தேசிய அணியில் சிறந்த பின் கள வீரராக விளங்கினார்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற SAFF கால் பந்தாட்ட சுற்றுப்போட்டியில்
இந்திய அணியுடனான போட்டியில் சிறந்த வீரருக்கான விருதினை பெற்றுக்கொண்டார்.
இவ்வருடத்திற்கான மிக பிரபலமான வீரருக்காக இடம் பெற்ற கருத்து கணிப்பில் ரன்னரப்பாக பியூஸ்லஸ் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.