உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – உண்மைகளை வெளிப்படுத்திய Channel 4….. பாதுகாப்பு அமைச்சிடமிருந்து வன்மையான கண்டனம்!!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் Channel 4 ஊடகமானது பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில்,
உலக அரங்கிலும் இலங்கை அரசியல் பரப்பிலும் இவ்விடயங்களே பேசுப்பொருளாக உள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில்,
Channel 4 வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளது.
அதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக “Channel 4” பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக இந்த பொய்யான குற்றச்சாட்டுகளை வன்மையாக நிராகரிப்பதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இலங்கை அரசாங்கம், அதன் சட்ட நடைமுறைப்படுத்தல் பிரிவினர், பாதுகாப்பு படையினர் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் என்பன விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருந்தன.
இதன்படி,
சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் இந்த தாக்குதலை மேற்கொண்டமை தெரியவந்தது.
இந்த நிலையில்,
ஏப்ரல் 21 தாக்குதலுக்கான பழியை இராணுவப்புலனாய்வு பிரிவு மீதும், மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீதும் அப்பட்டமாக மாற்றுவதற்கு முயற்சிக்கப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு வன்மையாக கண்டிக்கிறது.
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தின் வேதன பட்டியலில் இருந்ததில்லை.
இவ்வாறான தீங்கிழைக்கும் மற்றும் மோசமான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் ஏற்படும் எதிர்பாராத விளைவுகளுக்கு சனல் 4 ஊடகமே பொறுப்பேற்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.