சீன தடுப்பூசி ஒரு விஷம்! இலங்கையர்களை அழிப்பதற்கு கொண்டுவரப்பட்டதா?

சீன தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை. சீன தடுப்பூசி ஒரு விஷ தடுப்பூசி என எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நேற்று (06) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்யைில்,

தேசிய சுகாதார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பேராசிரியர் அசித டி சில்வா, டாக்டர் பாலித அபேகோன், லக்குமார பெர்னாண்டோ, கே.எம்.ஜி ஹேரத் மற்றும் டாக்டர் கபில ரணசிங்க ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நல்ல மருத்துவர்கள், இவர்கள் ஏன் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள் என கேள்வி எழுப்பினார்.

எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி, சீன தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வருவதை இந்த வைத்தியர்கள் எதிர்த்தனர்.

இவர்கள் அகற்றப்பட்டபோது அரசாங்கம் ஒரு காரணத்தையும் கூறவில்லை. .

சீன தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை. சீன தடுப்பூசி ஒரு விஷ தடுப்பூசி மற்றும் இந்த தடுப்பூசி இலங்கை மக்களுக்கு வழங்கப்படுகிறது.

“பிறப்பு கட்டுப்பாடு” என்ற ஒரு மருந்து ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது.

இது எந்த சோதனையும் இல்லாமல் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது, இதன் விளைவாக இன்று சுமார் 500,000 ஊனமுற்ற குழந்தைகள் உள்ளனர் என லக்ஷ்மன் கிரியெல்ல நினைவூட்டினார்.

இதேவேளை, சீன தடுப்பூசியைக் கொண்டுவர வேண்டியதன் காரணமாகவே இந்த அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் அகற்றப்பட்டு வேறு மருத்துவர் நியமிக்கப்பட்டார்.

எங்கள் மக்களுக்கு விஷம் கொடுத்து அழிக்கவா நீங்கள் அவ்வாறு செய்தீர்களா? எனவும் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *