இலங்கை எரிபொருளின் சில்லறைச் சந்தைப் பிரவேசிப்பது தொடர்பாக இன்று விசேட கூட்டம்….. எடுக்கப்படடன முக்கிய முடிவுகள் பல!!

இலங்கையின் எரிபொருள் சில்லறை சந்தைக்குள் பிரவேசிப்பது தொடர்பாக

அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலிய நிறுவனத்துடன் இணையவழி பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று(29/04/2023) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எரிபொருள் விற்பனை உடன்படிக்கைகள், அரசாங்கக் கொள்கைகள், தளவாடங்கள் மற்றும் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான காலக்கெடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,

யுனைடெட் பெற்றோலியம்(United Petroleum) அடுத்த வாரத்தில் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் திகதிகளை தெரிவிக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி, முதலீட்டுச் சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) ஆகியவற்றின் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

Completed an online negotiation meeting with United Petroleum, Australia this morning to discuss Fuel sales agreements, Govt policy, logistics & time line for commencement of operations in SL. United Petroleum will communicate the dates of commencement during the next week.… pic.twitter.com/37qbhqTEQ7

— Kanchana Wijesekera (@kanchana_wij) April 28, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *