#Virus

LatestNews

வீட்டிலிருந்து வெளியே செல்வோருக்கு – முக்கிய அறிவிப்பு

இதுவரையில் கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சரான விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு, கட்டான பகுதியில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எந்த வகையான தடுப்பூசி என்று பார்த்துக்கொண்டிருக்காமல், அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தல் மையத்திற்கு சென்று, ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். டெல்டா திரிபு மிக வேகமாக பரவுவதனால், வீட்டிலிருந்து வெளியேறுபவர்கள், மக்கள் கூடி இருந்தால், அந்த இடத்தில் தேநீர் அருந்தவோ அல்லது Read More

Read More
LatestNews

தொடர்ந்து முடக்கப்படும் ஸ்ரீலங்கா?? ஏற்றுக்கொள்ளப்படுமா ரணில் விக்ரமசிங்கவின் கருத்து!!

இலங்கையில் கொவிட் வைரஸிற்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்றிக்கொண்டவர்களுக்கு இலத்திரனியல் அட்டை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கம் இன்னும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவது அவசியம் என முன்னாள் பிரதமரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் 2021ஆம் ஆண்டிற்கான அதிக பணவீக்க விகிதம் ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளது.

Read More
LatestNews

தீவிர நிலையை அடைந்தது மேல் மாகாணம்! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

மேல் மாகாணத்தில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் சுமார் 50 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு ஒட்சிசனின் உதவி தேவைப்படுகின்றது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லால் பனாபிடிய தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். இதேவேளை, கொழும்பில் அடையாளம் காணப்படும் நோயாளர்களில் 90 Read More

Read More
LatestNews

வடமாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரனிற்கு Covid19 உறுதி!!

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனுக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த சமயத்தில், அவருடன் பழகியவரென்ற அடிப்படையில், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் அடிப்படையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read More
LatestNews

தடுப்பூசியை செயலிழக்கச்செய்யும் புதிய வைரஸ் இலங்கையில் உருவாகும்! இறுதியில் ஏற்படப்போகும் ஆபத்து!!

இலங்கையில் இந்த ஆண்டின் இறுதியில் தற்போதைய தடுப்பூசியை செயலிழக்கச்செய்யும், கொரோனா வைரஸின் புதிய கடுமையான திரிபு உருவாகும் ஆபத்து காணப்படுகின்றது. புதிய கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஒரு ஆபத்தான அச்சுறுத்தலை நாங்கள் எதிர்கொள்கிறோம் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு கொரோனா தொற்றுநோயின் 4 வது அபாய நிலையில் இருப்பதாகவும் அந்த சங்கம் அறிவித்துள்ளது. மேலும், இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சங்கத்தின் செயலாளர் டாக்டர் செனால் பெர்னாண்டோ வலியுறுத்துகிறார். Read More

Read More
LatestNews

பொது முடக்கத்திற்குள்ளாகிறதா நாடு?? தென்னிலங்கை ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்!!

நாட்டை முடக்குவது குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா மற்றும் திரிபடைந்த டெல்டா வைரஸ் பரவலின் தீவிரம் காரணமாக ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் கடும் சுகாதார பாதுகாப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வார இறுதியில் இந்த முடக்கம் அமுலுக்கு வரலாமெனவும், இந்த முடக்கம் சுமார் ஒரு மாத காலம்வரை நீடிக்குமெனவும் சுகாதாரத் துறையின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் தென்னிலங்கையில் இயங்கும் Read More

Read More
LatestNews

இலங்கை எட்டிய மைல்கல்! தொடரும் அடுத்த முயற்சி!!

கொவிட் -19 தடுப்பூசி இயக்கத்தில் இலங்கை 11 மில்லியன் மைல்கல்லை எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. இலங்கையில் இதுவரை 11 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு (11,081,092) கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் 30 வயதிற்கு மேற்பட்ட மொத்த மக்கள் தொகையில் 96% க்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் கொவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸினைப் பெற்றுள்ளனர் அதேநேரம் 30 வயதுக்கு மேற்பட்ட நாட்டின் மக்கள் தொகையில் 26% க்கும் அதிகமானோர் கொவிட் -19 Read More

Read More
LatestNews

கொரோனாவை தொடர்ந்தும் வேகமாக பரவும் மற்றுமொரு நோய் -10 மாவட்டங்கள் ஆபத்தான பகுதிகளாக அறிவிப்பு!!

நாட்டில் டெங்கு காய்ச்சல் மீண்டும் அதிகரித்து வருவதாகவும், 10 மாவட்டங்கள் அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் 16,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக நிபுணர் டொக்டர் ஹிமாலி ஹேரத் தெரிவித்தார். பதிவான ஒவ்வொரு 10 டெங்கு நோயாளிகளில் 7 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், இந்த ஆண்டு இதுவரை 7 பேர் டெங்கு Read More

Read More
LatestNewsWorld

மீண்டும் உலகை அச்சறுத்தும் சீனா! மற்றுமொரு வைரஸ் தாக்கம் – வெளிவந்த எச்சரிக்கை!!

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் ‘குரங்கு- B வைரஸ் (Monkey-B virus) தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 53 வயதான கால்நடை வைத்தியர் ஒருவர் இரண்டு குரங்குகளுக்கு உடற்கூறாய்வு செய்திருக்கிறார். சில மாதங்களுக்கு பின் குமட்டல், வாந்தி, காய்ச்சல், நரம்பு பாதிப்பால் அவதிப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த மே 27 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அவரது எச்சில் மற்றும் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் ‘குரங்கு B’ வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. ‘குரங்கு B’ வைரஸ் தாக்கி Read More

Read More
LatestNews

இலங்கையில் டெல்டா பரவக்கூடிய அபாயம் – ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை!!

உலக நாடுகளில் தற்போது பாரிய அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ள டெல்டா மரபணு மாற்றமடைந்த கொரோனா தொற்று இலங்கையில் மேலும் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதா இல்லையா என்கிற தீர்மானம் அடுத்தவாரத்தில் எடுக்கப்படலாம் என்று சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இலங்கையில் டெல்டா மாறுபாடான கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 05 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலயைில் தொற்று மேலும் பரவக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது. Read More

Read More