#Tsunami

FEATUREDLatestNewsTOP STORIES

திடீரென உள்வாங்கப்பட்ட கடல் நீர்….. சுனாமி அச்சத்தில் மன்னார் மீனவர்கள்!!

மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் திடீரென கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் இன்று(22/05/2024) அதிகாலை முதல் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் கடற்றொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லவில்லை. இந்நிலையில், வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் திடீரென கடல் நீர் உள் வாங்கியதோடு, கடற்கரையில் கட்டப்பட்டிருந்த படகுகள் மற்றும் வலைகள் நீரில் மிதந்து உள்ளன என நேரில் பார்த்தவர்கள் கூறியதாக பிரபல தென்னிலங்கை Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

இந்தியாவின் மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்….. இதுவரை வெளியாகாத சேத விபரங்கள்!!

இந்தியாவின் மகாராஷ்டிராவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது மகாராஷ்டிராவின் கோலாப்பூர் பகுதியில் இன்று(16/08/2023) காலை 6.45 மணியளவில் 3.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோலாப்பூர் மாவட்ட நிலப்பரப்பில் இருந்து 5 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலநடுக்கத்தால் உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. விடுக்கப்பட்ட்து சுனாமி எச்சரிக்கை!!

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் பல பகுதிகளுக்கு அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இம்மாநிலத்தில் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அலாஸ்கா மாநிலத்தின் தெற்கு பகுதியில் இருந்து சுமார் 106 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியிலேயே இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

இந்தோனேசியாவில் 7.9 ரிக்டர்  அளவில் நிலநடுக்கம்….. இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல்!!

இந்தோனேசியாவில் 7.9 ரிக்டர்  அளவில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், குறித்த இந்த நிலநடுக்கத்தினால் பெரிய சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என மேலும் அறிய முடிகிரிசாது. இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து இந்த செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் தனிம்பார் Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

சீனாவில் பாரிய நிலநடுக்கம்!!

சீனாவின் குயிங்காய் மாகாணத்தில் தெலிங்கா நகரில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இன்று ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டரில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இது 10 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. ஆயினும், மக்கள் நெருக்கம் குறைவான பகுதியிலேயே நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்க மையத்தில் இருந்து 20 கிலோ மீற்றர் வரை எந்த கிராமங்களும் இல்லை என தெலிங்கா நகர அவசரகால மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் தெலிங்கா நகரம் மற்றும் Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

7.3 ரிக்டர் அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஜப்பானில்….. விடுக்கப்பட்ட்து சுனாமி எச்சரிக்கை!!

ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள புகுஷிமா கடலோரப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி நேற்று (16/03/2022) இரவு 11.36 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகாக பதிவாகியியுள்ளது. கடலுக்கடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் காரணமாக அப்பகுதியிலுள்ள கட்டிடங்கள் கடுமையாக ஆடியிருக்கின்றன. இதனையடுத்து, பல பாகங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி Read More

Read More
LatestNews

கடலுக்கடியில் வெடித்துச் சிதறும் எரிமலை – தென் பசுபிக் பிராந்தியத்தில் சுனாமி பதற்றம்!!

பசுபிக் பிராந்திய கடலோரப் பகுதிகளை சுனாமி தாக்கும் அபாயம் நீங்கியுள்ளதாக கண்காணிப்பு அமைப்பான பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது. சுனாமி அச்சுறுத்தல் குறைந்துவிட்ட போதிலும், கடலோரப் பகுதிகள் வலுவான அல்லது அசாதாரண நீரோட்டங்கள் ஏற்படுவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அந்த மையம் கூறியுள்ளது. தென் பசுபிக் பிராந்தியத்தில் உள்ள ரொங்காவில் கடலுக்கடியில் உள்ள எரிமலை வெடிக்கும் நிலையில், சுனாமி ஏற்படலாம் என அமெரிக்காவும் ஜப்பானும் எச்சரிக்கை விடுத்திருந்தன. குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

17 வருடங்கள் முடிந்தும் கொஞ்சமும் குறையாத வலிகள்….. (நினைவேந்தல் புகைப்படங்கள்)!!

17 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தில் யாரும் எதிர்பார்த்திராத பாரிய அழிவு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் ஆட்சே பகுதியில் இருந்து புறப்பட்டது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இதே ஞாயிற்றுக்கிழமையில் இடம்பெற்ற சுனாமி எனும் ஆழிப் பேரலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக உலக வாழ் மக்களால் மறந்துவிட முடியாது. கடலுக்கடியில் உருவான அதிர்வெண் 9 தசம் 1 கொண்ட பூகம்பத்தால் 100 அடி உயரத்திற்கு அலைகள் கரைகளை தாக்கின. இந்த சுனாமியின் Read More

Read More
LatestNews

தென் பகுதிக்கு அண்மையில் 4.1 மெக்னிடியூட்டில் பதிவாகியுள்ள நிலநடுக்கம்!!

ஹம்பாந்தோட்டையில் இருந்து தென்கிழக்காக 160 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கடற்பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் இதை அறிவித்துள்ளது. 4.1 மெக்னிடியூட்டில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லையென புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More
LatestNews

ஹம்பாந்தோட்டையில்  நில அதிர்வு!!

ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹெர பகுதியில்  நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் நிலையம் அறிவித்துள்ளது. இன்று காலை 10.38 மணியளவில் 2.4 ரிச்டர் அளவில் உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது. இதனால் ஏற்படடுள்ள சேத விபரம் தொடர்பில் எதுவும் வெளியாகவில்லை.

Read More