இந்தியாவின் மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்….. இதுவரை வெளியாகாத சேத விபரங்கள்!!

இந்தியாவின் மகாராஷ்டிராவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது

மகாராஷ்டிராவின் கோலாப்பூர் பகுதியில் இன்று(16/08/2023) காலை 6.45 மணியளவில் 3.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கோலாப்பூர் மாவட்ட நிலப்பரப்பில் இருந்து 5 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலநடுக்கத்தால் உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *