7.3 ரிக்டர் அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஜப்பானில்….. விடுக்கப்பட்ட்து சுனாமி எச்சரிக்கை!!
ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள புகுஷிமா கடலோரப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு நேரப்படி நேற்று (16/03/2022) இரவு 11.36 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகாக பதிவாகியியுள்ளது.
கடலுக்கடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் காரணமாக அப்பகுதியிலுள்ள கட்டிடங்கள் கடுமையாக ஆடியிருக்கின்றன.
இதனையடுத்து,
பல பாகங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளிலுள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.