#Srilanka

LatestNews

கொரோனா மரணங்கள் அதிகரிக்கக்கூடும்! இராணுவ தளபதி தகவல்!!

எதிர்வரும் நாள்களில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று இராணுவத் தளபதியும் கொரோனா கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், “இலங்கையில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கும் அதேவேளை, கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் உயர்வடைகின்றது. எதிர்வரும் நாள்களில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். ஒவ்வொருவரும் கொரோனாத் தடுப்பு சுகாதார விதிமுறைகளை Read More

Read More
LatestNews

மீண்டும் முழுநேரப் பயணத்தடை! இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்!!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் நடைமுறைக்கு வரும் வகையில் மேலும் 2 பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 தடுப்புச் செயலணியின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி மே 21 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 11 மணி தொடக்கம், மே மாதம் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி வரை பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மே 25 செவ்வாய்கிழமை இரவு 11 Read More

Read More
LatestNews

பைஸர் தடுப்பூசி வழங்குவது தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்!!

பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றவுடன் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு அந்த தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப்பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ஸ்புட்னிக் மற்றும் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகளை 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்படவில்லை.

Read More
indiaLatestNews

இந்தியாவின் திரிபடைந்த கொரோனா வைரஸ் இலங்கையில் சமூக தொற்றாக பரவுமா? அமைச்சர் வெளியிட்ட தகவல்

இந்திய கொவிட் வைரஸ் தொற்று திரிபு இலங்கையில் சமூகத் தொற்றாக உருவாகக்கூடிய சாத்தியமில்லை என கருதுவதாக இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் பி.1.617 என்னும் கொவிட் வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இந்த வைரஸ் தொற்று தனிமைப்படுத்தல் முகாமிலேயே கண்டறியப்பட்டுள்ளது எனவும் சமூகத்திலிருந்து பதிவாகவில்லை எனவும் ராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அதேவேளை, Read More

Read More
LatestNews

முடிவுகளுக்காக காத்திருக்கும் இலங்கை!

கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் வெளிநாடுகளில் உள்ள வல்லுநர்கள் நடத்திய சோதனைகளின் முடிவுகளை இலங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முடிவுகள் கிடைத்தவுடன் முதல் கொரோனா தடுப்பூசிகளுக்கு பதிலாக வெவ்வேறு தடுப்பூசிகளை பயன்படுத்துவது குறித்து இலங்கை முடிவெடுக்கும் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சில நாடுகளில் தடுப்பூசிகளைக் கலந்து செலுத்தும் செயற்பாடு நடைமுறையில் உள்ளது. ஏனைய நாடுகளில் இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை கலப்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் செய்தித் Read More

Read More
LatestNews

கொரோனா நோயாளிகளை வீடுகளில் வைத்து சிகிச்சையளிப்பது தொடர்பில் ஆராயும் அரசு!

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், கொவிட் 19 தொற்றாளர்களாக இருந்தாலும் அவர்களில் நோய் அறிகுறிகள் ஏற்படாதவர்களை வீடுகளில் தங்க வைத்து சிகிச்சையளிப்பது குறித்த விசேட நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது. இந்தநிலையில், இதற்கு தேவையான சுகாதார ஆலோசனைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விரைவில் வெளியிடவுள்ளதாக கொரோனா கட்டுப்படுத்தல் சம்பந்தமான ராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றாளர்களை வீடுகளில் தங்க வைத்து சிகிச்சையளிக்கவும் வீடுகளில் உள்ள ஏனையோருக்கு நோய் தொற்றாத வகையில் தனிமைப்படுத்தி வைக்கவும் Read More

Read More
LatestNews

பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் எதிரொலி! வீதிகளை நோட்டமிடும் ட்ரோன்கள்!

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ட்ரோன் கமராப் பிரிவு இன்று தொடக்கம் வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவிருப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்பு நகரின் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவது, வீதிச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதும் இதன் நோக்கமாகும். காலி வீதி, நாடாளுமன்ற வீதி, கண்டி – நீர்கொழும்பு வீதிகள் ஆகிய இடங்களை இலக்காகக் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. ட்ரோன் Read More

Read More
LatestNews

கொரோனாவின் கோரம்! தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள்!!!!

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,இலங்கை போக்குவரத்து சபையின் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த சேவைகள் நேற்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இந்த Read More

Read More
LatestNews

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் 100 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில், இதற்கமைய, மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று பிற்பகல் வேளையில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலும், முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் Read More

Read More
indiaLatestNews

இந்திய மீனவர்களுக்கு ஒரு நீதி இலங்கை மீனவர்களுக்கு மற்றொரு நீதியா? ஆதங்கத்தில் உறவுகள்!

இந்திய கடல் எல்லைக்குள் எல்லை தாண்டி வருகை தந்ததாக கடந்த மாதம் பத்தாம் திகதி மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த இரு மீனவர்கள் இந்திய கரையோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த ரவீந்திரன் அருண் குரூஸ், வெலிசோர் றேகன் பாய்வா ஆகிய இரு மீனவர்களுமே இந்திய கரையோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்மந்தப்பட்ட மீனவர்களின் Read More

Read More