இந்தியாவின் திரிபடைந்த கொரோனா வைரஸ் இலங்கையில் சமூக தொற்றாக பரவுமா? அமைச்சர் வெளியிட்ட தகவல்

இந்திய கொவிட் வைரஸ் தொற்று திரிபு இலங்கையில் சமூகத் தொற்றாக உருவாகக்கூடிய சாத்தியமில்லை என கருதுவதாக இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் பி.1.617 என்னும் கொவிட் வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த வைரஸ் தொற்று தனிமைப்படுத்தல் முகாமிலேயே கண்டறியப்பட்டுள்ளது எனவும் சமூகத்திலிருந்து பதிவாகவில்லை எனவும் ராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்தியாவில் பதிவாகி வரும் திரிபடைந்த வைரஸ் தொற்று தடுப்பூசிகளினால் கட்டுப்படுத்தக் கூடியதல்ல எனவும் மூல வைரஸை விடவும் ஆபத்தானதுடன் விரைவாக பரவக்கூடியது எனவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதம விஞ்ஞானி சௌமிய சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *