தமிழீழம் எனும் பெயரில் புதிதாக வலைப்பந்தாட்ட அணி….. பூரிப்பில் தமிழர்கள்!!

தமிழீழம் எனும் பெயரோடு சிறப்பான வலைப்பந்தாட்ட பெண்கள் அணி ஒன்று லண்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பலதரப்பட்ட வலிகளை சுமந்து நிக்கும் எமது மக்களுக்கு கண்ணெதிரே எமது இளைய தமிழ்சமுதாயம் தமிழீழம் எனும் பெயரோடு சிறந்த அணியாக சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கின்ற காட்சி மிகுந்த பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது என தமிழர்கள் பலரும் பெருமையுடன் பேசி வருகின்றனர். TRO எனும் அமைப்பின் ஏற்பாட்டில் 08/05/2023 அன்று நடைபெற்ற விளையாட்டு விழாவில் தமிழீழ வலைப்பந்து அணியானது மிகவும் சிறப்பான ஆட்டத்தை Read More

Read more

கனடாவில் ஈழத்தமிழருக்கான நினைவுத் தூபியின்(முள்ளிவாய்க்கால்) மாதிரிவடிவத்தை அமைப்பதற்கு அந்தநாட்டு அரசு அனுமதி!!

முள்ளிவாய்க்காலில் நிர்மூலமாக்கப்பட்டு அழித்துச் சிதைக்கப்பட்ட ஈழத்தமிழருக்கான நினைவுத் தூபியின் மாதிரிவடிவத்தை பிறம்ரன் பெருநகர் இன்று உத்தியோக பூர்வமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே தமிழ் இனப்படுகொலைக்கான நினைவாலயத்தை கனடா பிரம்ரன் மாநகரசபை உருவாக்க முன் வந்துள்ளது. கனடாவின் புகழ் பூத்த பூங்காவான செங்கூசி பூங்காவில் பிராம்ரன் நகரசபை இந்த நினைவாலயம் கட்டுவதற்கான நிலத்தை ஒதுக்கி தமிழ் மக்களுக்கு தந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் நடந்து முடிந்த மிகப் பெரிய இனவழிப்பாக ஈழத்தமிழருக்கு நடந்தேறிய இனப்படுகொலை இருந்த போதிலும், அதனை Read More

Read more

இலங்கை தமிழர் அகதிகளுக்காக 317 கோடிரூபா செலவில் வீடுகள் கட்டி கொடுக்க தமிழக அரசு முடிவு!!

தூத்துக்குடி, விளாத்திகுளமருகே தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருடன் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் கலந்துரையாடி, தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார். தாளமுத்துநகர், மாசார்பட்டி, குளத்துவாய்பட்டியிலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களையும் ஆய்வு செய்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைப்பட தமிழகம் முழுவதும் 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு 317 கோடிரூபாவில் புதிய Read More

Read more

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் நினைவேந்தல்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் ஆத்மார்த்தரீதியாக பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் மதியம் 12 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மாணவர்களாலும் பல்கலைக்கழக ஊழியர்களாலும் மலரஞ்சலி செலுத்த்தியதோடு ஈகைச்சுடர் ஏற்றி ஒரு நிமிட அகவணக்கமும் இடம்பெற்றது.

Read more

மாவீரர் நினைவேந்தலுக்கு முல்லைத்தீவில் விதிக்கப்பட்டது தடை!!

எதிர்வரும் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் நினைவேந்தலுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி சரவணராஜா இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார். இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து அதற்கான தடையுத்தரவை பெறுவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர் இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி, ஐயன்கன்குளம் ஆகிய ஏழு காவல் நிலையங்களை சேர்ந்த காவல்துறையின் Read More

Read more

இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர் தொடர்பில் M. K. Stalin வெளியிட்ட அறிவிப்பு – நாமலின் பதிவு!!

இலங்கையில் 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர்,தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதானம் செலுத்தியமையை வரவேற்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை அகதிகளுக்கு தமிழக முதலமைச்சர் சிறப்புரிமைகளை அறிவித்த நிலையிலேயே, நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டர் தளத்தில் இதனைக் கூறியுள்ளார். யுத்த காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்று, நாடு திரும்ப விரும்பும் அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு மீள வருகை தரும் அகதிகளுக்கு ஜனாதிபதி Read More

Read more

“இனி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாம் இனி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண்மை, கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய தி.மு.க உறுப்பினர் பூண்டி கலைவாணன், அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் நலனுக்காகவும், அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்துவதற்காகவும் முதலமைச்சர் நேற்று வெளியிட்ட அறிவுப்புக்களை பாராட்டினார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்றும் நானும் Read More

Read more

இன்று மீண்டும் 16 ஈழத் தமிழர்கள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!!

திருச்சி மன்னார்புரம் சிறப்பு முகாமில் 16 ஈழத் தமிழர்கள் கூட்டாக விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி வயிற்றை கிழித்தும், கழுத்தை அறுத்தும் இலங்கை அகதிகள் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த சிறைச்சாலையில் உள்ள விசேட முகாமில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 இற்கும் மேற்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள், கொரோனா தொற்றுப் பரவல் Read More

Read more