மீண்டும் ஜப்பான் கடற்பரப்பில் ஏவுகணையை பரிசோதித்தது வட கொரியா….. நிலையற்ற தாக்கம் என அமெரிக்கா எச்சரிக்கை!!

வட கொரியா மீண்டும் கடலோர நகரமான சின்போவில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல் உதவியுடன் ஏவுகணையை ஜப்பான் கடற்பரப்பில் ஏவியுள்ளது என்று தென் கொரிய கூட்டுப் பணியாளர்கள் (JCS)தெரிவித்துள்ளனர். தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் இராணுவ பயிற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏவுகணை ஏவப்பட்டு இருப்பதாக JCS தெரிவித்துள்ளது. குறித்த ஏவுகணை இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், “கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை வலுப்படுத்தும் அதே வேளையில், நமது ராணுவம் அமெரிக்காவுடன் நெருக்கமான ஒத்துழைப்பில் முழு தயார் Read More

Read more

ஒருபக்கம் சமாதான பேச்சுவார்த்தை, மறுபக்கம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனை குழப்பும் புடின்!!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா பரீட்சித்துள்ளது. ஏவுகணை பரீட்சிக்கப்பட்ட காணொளியையும் ரஷ்யா வௌியிட்டுள்ளது. அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை ரஷ்யாவின் வட மேற்கு பகுதியிலுள்ள ஆர்க்காங்கெல்ஸ்கில் அமைந்துள்ள ‘பிளெசெட்ஸ்க்’ (Plechetsk) விண்கலத்தில் இருந்து ஏவப்பட்டு, ரஷ்யாவின் கிழக்கு “கம்சட்கா தீபகற்பத்தில்” (Kamchatka Peninsula) தரையிறக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவை அச்சுறுத்த முயற்சிப்பவர்களுக்கு இது சிந்தனைக்கான உணவு என ரஷ்ய ஜனாதிபதி “விளாடிமீர் புட்டின்” தெரிவித்துள்ளார்

Read more

உக்ரைனுக்கு தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், ஏவுகணைகளை அனுப்பவுள்ள ஜேர்மனி!!

‘ஜேர்மனி 1,000 தாங்கி எதிர்ப்பு ஆயுதங்களையும் 500 “ஸ்டிங்கர்” தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணைகளையும் உக்ரைனுக்கு அனுப்பவுள்ளது’ என்ற தகவலை அந்தநாட்டு அரசு உறுதிசெய்துள்ளது. மோதல் நிகழும் பகுதிகளுக்கு ஆயுத ஏற்றுமதியைத் தடை செய்யும் அதன் நீண்டகால கொள்கையில் பெரிய மாற்றத்தை இந்த நடவடிக்கை காட்டுகிறது. “இந்தச் சூழ்நிலையில், விளாடிமிர் புடினின் இராணுவத்திற்கு எதிராக உக்ரைனை பாதுகாப்பதில் எங்களால் முடிந்தவரை ஆதரவளிப்பது எங்கள் கடமை,” என்று ஜேர்மன் அரசுத் தலைவர் ஓலோஃப் ஸ்கோல்ஸ் கூறியுள்ளார்.

Read more

மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது மர்ம தேசம்!!

மர்ம தேசமென அறியப்படும் வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையில் இறங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புத்தாண்டு தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்ல’ என்று கூறியிருந்தார். இதனால், இந்த ஆண்டு முதல் வடகொரியா ஏவுகணை பரிசோதனையை படிப்படியாக குறைத்துக்கொள்ளும் என நம்பிக்கை உருவாகியிருந்தது. இந்நிலையில், தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை வடகொரியா இன்று Read More

Read more

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஜப்பான் கடற்கரையில் ஏவிய மர்மதேசம்!!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஜப்பான் கடற்கரையில், மர்மதேசம் என அறியப்படும் வடகொரியா ஏவியுள்ளதாக தென்கொரியா மற்றும் ஜப்பானின் இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது. வட கொரியாவின் கிழக்கில் உள்ள சின்போ துறைமுகத்தில் இருந்து ஒரு ஏவுகணை ஏவப்பட்டதாகவும், குறித்த ஏவுகணை ஜப்பான் கடல் என அழைக்கப்படும் கிழக்கு கடலில் தரையிறங்கியது என்றும் தென் கொரியாவின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் கூறியுள்ளனர். அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், இந்த நடவடிக்கை மிகவும் வருந்தத்தக்கது எனவும் ஜப்பானின் பிரதமர் Read More

Read more