கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஜப்பான் கடற்கரையில் ஏவிய மர்மதேசம்!!
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஜப்பான் கடற்கரையில், மர்மதேசம் என அறியப்படும் வடகொரியா ஏவியுள்ளதாக தென்கொரியா மற்றும் ஜப்பானின் இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் கிழக்கில் உள்ள சின்போ துறைமுகத்தில் இருந்து ஒரு ஏவுகணை ஏவப்பட்டதாகவும், குறித்த ஏவுகணை ஜப்பான் கடல் என அழைக்கப்படும் கிழக்கு கடலில் தரையிறங்கியது என்றும் தென் கொரியாவின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், இந்த நடவடிக்கை மிகவும் வருந்தத்தக்கது எனவும் ஜப்பானின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய வாரங்களில், வடகொரியா ஹைப்பர்சொனிக் மற்றும் நீண்ட தூர கப்பல் ஏவுகணைகள் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் என கூறிக்கொள்ளும் சோதனைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்தச் சோதனைகளில் சில கடுமையான சர்வதேச தடைகளை மீறுகின்ற நிலையில், ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத சோதனையை நடத்துவதற்கு வடகொரியாவுக்கு, ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்துள்ளது.
இருப்பினும் வடகொரியாவின் இத்தகைய ஏவுகணைச் சோதனைகளால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.