#gotabaya rajapaksa

FEATUREDLatestNews

கோட்டாபயவிற்கு இறுகும் நெருக்கடி- வருகிறது நம்பிக்கையில்லா பிரேரணை

Zoom தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்சித் தலைவர்களுக்கும் சபாநாயகருக்கும் இடையில் கட்சித் தலைவர்களின் விசேட சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றது. சபாநாயகருடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாச, லக்ஷ்மன் கிரியெல்ல, ரஞ்சித் மத்துமபண்டார, ரவூப் ஹக்கீம், ரணில் விக்கிரமசிங்க, ரிஷாத் பதியுதீன், எம். ஏ. சுமந்திரன் மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர். அலி சப்ரி மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் அரசாங்கம் சார்பில் இணைந்தனர். அரச தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. Read More

Read More
FEATUREDLatestNews

இன்றிரவு கோட்டாபயவின் விசேட அறிவிப்பு

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்றிரவு 9 மணிக்கு விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார். அவரது இந்த அறிவிப்பு அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது. நாட்டில் தற்போது அரசுக்கெதிரான மக்களின் போராட்டம் அதிகரித்துள்ள நிலையில் அரச தலைவர் விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.    

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்டது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து முக்கிய அறிவிப்பு!!

இன்று அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாத பட்சத்தில் நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் இன்றைய நிலவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன்படி ஊரடங்கு தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனவே, நாட்டில் இன்றைய நிலைவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா? அல்லது நீடிப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான இடைக்கால அரசை பொறுப்பேற்க தயார்….. அனுர குமார திசாநாயக்க!!

பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் என அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ச பதவியில் இருக்கும் வரை நாட்டில் ஸ்திரத்தன்மை நிலவாது என்றும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “கோட்டா கோ கம“ போராட்டத்தை தவிர்த்து Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இலங்கையர்கள் அனைவரிடமும் ஜனாதிபதி கோட்டாபய Twitter வழியாக கோரிக்கை!!

இலங்கையர்கள் அனைவரிடமும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச சற்று முன்னர் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு, அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய தருணம் இது. இன மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் உங்களைத் தள்ளும் நாசகார முயற்சிகளை நிராகரிக்குமாறு அனைத்து இலங்கையர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். நிதானம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை ஊக்குவித்தல் இன்றியமையாதது என அவர் தெரிவித்துள்ளார். Read More

Read More
FEATUREDLatestNews

எரிவாயு ஏற்றும் பாரவூர்திகளுக்கும் தீ வைப்பு….. கேகாலையில் சம்பவம்!!

கேகாலை – மாவனெல்லை பகுதியில் லிட்ரோ எரிவாயு ஏற்றிச்செல்லும் 3 பாரவூர்திகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு எரிவாயு ஏற்றிச்செல்லும் 3 பாரவூர்திகள் நிறுத்தப்படும் முற்றத்திற்கும் அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்துள்ளனர். குறித்த எரிவாயு ஏற்றிச்செல்லும் 3 பாரவூர்திகள் மஹீபால ஹேரத் என்பவருக்கு சொந்தமானவை என்று கூறப்படுகிறது. அங்கிருந்த எரிவாயு சிலிண்டர்களும் அடையாளம் தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளன.   இச்சம்பவத்தைத் தொடர்ந்து மாவனெல்லை தீயணைப்பு பிரிவின் வாகனங்கள் மற்றும் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

டொலர்களோ ரூபாய்களோ நாட்டில் இல்லை ‘ஹர்ஷ டி சில்வா’ அதிர்ச்சி தகவல்!!

தற்போது நாட்டில் டொலர்களோ ரூபாய்களோ இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.   இதேவேளை, எதிர்காலத்தில் நாட்டைக் ஆட்சி செய்யும் எந்தவொரு குழுவிற்கும் இது மிகவும் கடினமான இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   இதுகுறித்து தனது டுவிட்டர் தளத்தில் கருத்தொன்றை பதிவிட்ட அவர்,   ஹர்ஷ டி சில்வா  அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே சொடக்கவும்   “எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மத்திய வங்கியின் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தை மறுபடியும் முற்றுகை!!

சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தை மக்கள் தற்போது முற்றுகையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   அங்கு சென்ற மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.   ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்திய ஆர்ப்பாட்டத்தை போன்றே தற்போது ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.   சிறிய அளவிலான மக்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் வருகைத்தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

33 வீடுகள் உட்பட்ட மொத்தமாக 37 சொத்துக்கள் தீக்கிரையானகின….. முழுமையான விபரங்கள்!!!

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான 33 வீடுகள் மொத்தமாக நேற்று இரவு எரிக்கப்பட்டன.   சில தனியார் சொத்துக்களும் அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் காரணத்திற்காக எரிக்கப்பட்டன. மொத்தமாக எரிக்கப்பட்ட சொத்துகளின் விபரங்கள் வருமாறு, 1. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பூர்வீக மெதமுலனை இல்லம்.   2. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குருநாகல் இல்லம்.   3. புத்தளத்தில் சனத் நிஷாந்தவின் இல்லம்.   4. பண்டாரவளையில் ஜனக திஸ்ஸ Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கலவரத்தை ஏற்படுத்த அழைத்து வரப்பட்ட கைதிகள் தொடர்பில் சிறைச்சாலை வட்டாரங்களிலிருந்து திடுக்கிடும் தகவல்!!

அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டத்தில் அரச ஆதரவாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட கும்பல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டது. குறித்த வன்முறை சம்பவங்களுக்காக சிறையிலிருந்து கைதிகள் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கானவர்கள் வழங்கிய வாக்குமூலத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமுர்த்தி பயனாளர்களும் அச்சுறுத்தி அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Read More