லொறி குடைசாய்ந்து விபத்து – சம்பவ இடத்திலிருந்த வீட்டில் இருந்த….. இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!!

கொட்டகலை – திம்புல பத்தனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட

இராவணகொட – விஜயபாகுகந்த, மெதகம்மெத்த பிரதேசத்தில் லொறியொன்று கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று(05/10/2022) இரவு இடம்பெற்றதாக திம்புல பத்தனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் இராவணகொட விஜயபாகுகந்த, மெதகம்மெத்த பிரதேசத்தில் வசிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அட்டன் டிப்போவில்(Hatton Dipport) நடத்துனராக கடமையாற்றும் பி. ஜகத் ஜெயானந்த பண்டார (48 வயது) இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

ஹட்டனில் இருந்து மெதகம்மெத்த பிரதேசத்தில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக மணல் மற்றும் கூரைத் தகடுகளை ஏற்றிச் சென்ற லொறியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் பின்நோக்கிச் சென்ற நிலையில்,

வீதியின் குறுக்கே குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த குறித்த நடத்துனர் பணி முடிந்து வீடு திரும்புவதற்காக லொறியின் பின்பகுதியில் பயணித்த போது,

லொறியில் பின்நோக்கி சென்று குடைசாய்யும் வேளையில் இவரின் மீது அதிலிருந்த கூரைகள் உடல் மீது விழுந்ததில் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

விபத்தில் லொறியின் சாரதி மற்றும் சாரதி உதவியாளரும் காயமடைந்துள்ளதுடன்,

அவர்கள் சிகிச்சைக்காக மல்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புல பத்தனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *