18 வயது மாணவி நடு வீதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலை!!
பதுளை − ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவி கொலைசெய்யப்பட்டமைக்கு காதல் விவகாரமே காரணம் என ஹாலிஎல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்,
பாடசாலை மாணவியை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஹாலிஎல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரை இன்று (09/03/2022) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சர்வதேச மகளிர் தினமான நேற்று மாணவி ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம்,
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலி எல – உடுவரை மேல் பிரிவின் 7 ஆம் கட்டை பகுதியில் 18 வயதான பாடசாலை முடித்து வீடு திரும்பிய மாணவி ஒருவரே ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலிஎல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.