தொடர்ந்து கொழும்பு கடற்பகுதியில் படையெடுக்கும் முதலைகள்!!
காலி முகத்திடல் கடற்பகுதியில் நேற்றைய தினம் முதலை ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில்,
வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை மற்றும் காலி முகத்திடல் கடற்பகுதிகளில் 3 முதலைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்றாம் திகதி தெஹிவளை, தொடருந்து நிலையத்திற்கு அருகில் முதலை தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
எவ்வாறாயினும்,
தெஹிவளை கடற்பகுதியில் பிரவேசித்த முதலை இன்னும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் பிடிக்கப்படவில்லை. மேலும்,
இந்நிலையில்,
காலி முகத்திடலில் நேற்றைய தினம் அவதானிக்கப்பட்ட முதலை சிறிய அளவுடையது எனவும்,
குறித்த முதலைகளை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெஹிவளையில் அவதானிக்கப்பட்ட முதலை 12 அடி நீளமுடையது எனவும்,
வெள்ளவத்தையில் கண்டறியப்பட்ட முதலை 7 முதல் 8 அடி நீளம் கொண்டது என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.