இந்திய மீனவர்களின் 105 படகுகள் ஏலத்தில் விடுவதற்கு தீர்மானம்!!

தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஏலத்தில் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை கடற்படை பறிமுதல் செய்து வருகின்றது. இதற்கமைய 105 படகுகள் அரசுடமையாக்கப்பட்டு தொடர்ச்சியாக 5 நாட்கள் பகிரங்க ஏலத்திற்கு விடப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த ஏலம், எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் 5 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 7 ஆம் திகதி யாழ்ப்பாணம் காரைநகரில் 65 படகுகளையும், Read More

Read more

தொழிலுக்கு சென்ற தந்தையும் மகனும் சடலங்களாக கரையொதுங்கல் (படங்கள்)!!

மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடலில் மீன் பிடிக்கச் சென்ற தந்தையும் மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாகரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இவர்கள் இருவரது சடலங்களும் காயன்கேணி கடல் பரப்பில் இருந்து சுழியோடிகளின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. கண்ணகி அம்மன் கோவில் வீதி காயான்கேணியைச் சேர்ந்த மு.திசநாயகம்(வயது 56) என்ற தந்தையும் அகிலவாசன் (21 வயது) மகனுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை மாலை வழக்கம் போல் Read More

Read more

யாழ்ப்பாணத்தில் அதிகாலை வேளை நடந்த துயரம்!!

யாழ். மாதகல் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் இன்று (11) அதிகாலை சடலமாக கரை ஒதுங்கியுள்ளார். மாதகல் குசுமாந்துறையைச் சேர்ந்த திலீபன் (வயது-32) என்ற மீனவரே இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியுள்ளார். குறித்த மீனவர் தொழிலுக்குச் சென்ற படகு மாதகல் கடற்பரப்பில் 200 மீற்றர் தூரத்தில் கவிழ்ந்து காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து உள்ளூர் மீனவர்களினால் படகு மீட்கப்பட்டதுடன், உயிரிழந்த மீனவரின் சடலமும் மீட்கப்பட்டது. மீனவரின் படகு மீது கடற்படையினரின் படகு மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது என Read More

Read more

நாயாறு கடலில் கரையொதுங்கியுள்ள 120 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட மர்மப் பொருள் போன்ற பாரிய கப்பல்!!

முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் மர்மப் பொருள் போன்ற பாரிய கப்பல் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை தொழிலுக்காக சென்ற மீனவர்கள் குறித்த கப்பல் கரை ஒதுங்கியுள்ளதைக் கண்டு கடற்படையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, குறித்த பகுதிக்கு கடற்படையினர் விரைந்துள்ளனர். 120 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்டதாகக் காணப்படும் இந்தக் கப்பல், செம்மலை கிழக்கு நாயாறு கடற்கரையிலிருந்து 25 மீட்டர் தூரத்தில் கடலில் தலைகீழாக புரண்ட நிலையில் கரை ஒதுக்கியுள்ளது. இந்தக் கப்பல் யாருடையது? எங்கிருந்து Read More

Read more

முடக்கிய நிலையில் உள்ள ஏ9 வீதி!!

யாழ்.மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் தற்பொழுது ஏ9 வீதி முடங்கிய நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு காணப்படுகின்றன. இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் இருந்து கடற்றொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ் மாவட்ட Read More

Read more

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து நாளொன்றுக்கு 3-4 லட்சத்திற்குஅதிகமாக அதிகமாக வருமானம் பெறும் மீனவர்கள்!!

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கடற்கரைகளில் பாரிய மீன்கள் பிடிபடுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 வகையான பாரிய பாரை, வளை மற்றும் சுறா மீன்கள் போன்றன கரைவலைகள் மூலம் பிடிக்கப்படுவதாகவும்  அதனைப் பல இலட்சம் ரூபாவரை வருமானம் ஈட்ட முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்வாறு இன்றைய தினம்  சாய்ந்தமருது மற்றும் கல்முனை பகுதிகளில் பாரை இன மீன்கள் அதிகளவாக கரைவலைகளுக்கு பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. Read More

Read more

யாழ்ப்பாண கடற்பரப்பில் அடுத்தடுத்து கரையொதுங்கும் மனித உடல்கள்!!

நேற்று காலை வல்வெட்டித்துறை மணல்காடு பகுதிகளில் இரு உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதே போல், யாழ்ப்பாணம் – நெடுந்தீவு காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட, 5ஆம் வட்டாரம் திரிலிங்கபுரம் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. சடலம் குறித்த பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களால் இன்று அவதானிக்கப்பட்ட நிலையில் நெடுந்தீவு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், மேலதிக விசாரணை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு அடுத்தடுத்து சடலங்கள் கரையொதுங்கி வரும் நிலையில், Read More

Read more

குறைந்த காற்றழுத்தம் விருத்தியடையும்!!

நாட்டைச் சூழவுள்ள பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வழங்கப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போதுமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் Read More

Read more

யாழ் குடாநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

யாழ்ப்பாணத்தில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் வசிப்போர் மிகவும் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. தற்போதுள்ள தாழமுக்கத்தின் காரணமாக யாழ். மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் காற்றின் வேகமானது 60 தொடக்கம் 65 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால், கடற்கரையை அண்டிய பகுதியில் வசிப்போர் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், கடற்றொழிலுக்கு செல்வோர் மிகவும் அவதானமாக செயற்படுமாறும், மறு அறிவித்தல் வரும் வரை அவதானமாக செயற்படுமாறும் யாழ். மாவட்ட அனர்த்த Read More

Read more

தொடங்கிவைக்கப்பட்டது முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரையான மீனவர்களின் போராட்டம்!!

முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை நோக்கிய மீனவர்களின் போராட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த போராட்டம் முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் காலை 7.00 மணிக்கு தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட படகுகளுடன் மீனவர்கள் போராட்டத்தில் பங்குகொண்டுள்ளனர். இழுவைப் படகுகள் தடைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முல்லைத்தீவு தொடக்கம் பருத்தித்துறை வரையில் மேற்கொள்ளப்படுகின்ற மீனவர்கள் போராட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, எஸ்.சிறீதரன், இரா.சாணக்கியன் Read More

Read more