திடீர் காலநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து நாளொன்றுக்கு 3-4 லட்சத்திற்குஅதிகமாக அதிகமாக வருமானம் பெறும் மீனவர்கள்!!

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கடற்கரைகளில் பாரிய மீன்கள் பிடிபடுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 வகையான பாரிய பாரை, வளை மற்றும் சுறா மீன்கள் போன்றன கரைவலைகள் மூலம் பிடிக்கப்படுவதாகவும்  அதனைப் பல இலட்சம் ரூபாவரை வருமானம் ஈட்ட முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இன்றைய தினம்  சாய்ந்தமருது மற்றும் கல்முனை பகுதிகளில் பாரை இன மீன்கள் அதிகளவாக கரைவலைகளுக்கு பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

குறித்த பாரை மீன் ஒன்றின் பெறுமதி சுமார் 1000 ரூபா முதல் 1200 வரை விற்பனையாவதுடன் இதேவேளை இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களினால் ஒரு மீனவரின் நாள் வருமானமாக 4 முதல் 5 இலட்சமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது கல்முனை கடற்கரையில் கரை வலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி தூண்டில் என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில் கரைவலை மீனவர்களுக்கு இவ்வாறான பாரிய மீன்கள் தொகுதியாக பிடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *