இந்திய மீனவர்களின் 105 படகுகள் ஏலத்தில் விடுவதற்கு தீர்மானம்!!

தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஏலத்தில் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை கடற்படை பறிமுதல் செய்து வருகின்றது.

இதற்கமைய 105 படகுகள் அரசுடமையாக்கப்பட்டு தொடர்ச்சியாக 5 நாட்கள் பகிரங்க ஏலத்திற்கு விடப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த ஏலம்,

எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் 5 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

7 ஆம் திகதி யாழ்ப்பாணம் காரைநகரில் 65 படகுகளையும், 8 ஆம் திகதி காங்கேசன்துறையில் 5 படகுகளையும், 9 ஆம் திகதி கிராஞ்சியில் 24 படகுகளையும், 10 ஆம் திகதி தலைமன்னாரில் 9 படகுகளையும், 11 ஆம் திகதி கற்பிட்டியில் 2 படகுகளையும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஏலத்தில் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *